4 மணிநேர போராட்டத்திற்கு பிறகு வனப் பகுதியில் எரிந்த தீயை வனத்துறையினர் அணைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள நெருஞ்சிப்பேட்டை பகுதியில் பல்வேறு அரிய வகை மரங்கள் இருக்கும் பாலமலை வனப்பகுதி அமைந்துள்ளது. மேலும் இந்த வனப்பகுதியானது கரடி, முயல், மான் போன்ற வனவிலங்குகளின் இருப்பிடமாக திகழ்கின்றது. இந்நிலையில் வெயிலின் தாக்கத்தினாலும், கடந்த நான்கு மாதங்களாக மழை இல்லாத காரணத்தினாலும் வன பகுதியில் உள்ள மரங்கள் காய்ந்து வரண்டு போய் இருந்துள்ளது. இதனால் நெருஞ்சிப்பேட்டை […]
