கனமழை காரணமாக சாலையில் சாய்ந்த மரங்களை தொழிலாளிகள் மூலம் அகற்றும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருவெண்காட்டை சுற்றியுள்ள பெருந்தோட்டம், பூம்புகார், திருநகரி, திருவாலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. இதனால் திருவாலி சாலையில் 2 மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளன. மேலும் மின் கம்பிகள் அறுந்து விழுந்ததால் சுற்றுப்புற பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த ஊராட்சி மன்ற தலைவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தொழிலாளர்களை […]
