திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதிகள் இணைந்து மரக்கன்று நட்ட சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தது. அரியலூர் மாவட்டத்திலுள்ள நல்லாம்பாளையம் பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓவிய ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அதே பகுதியில் வசிக்கும் பத்மபிரியா என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்கள் இருவரும் திருமணம் முடிந்த உடனேயே நல்லம்பாளையம் அரசு பள்ளிக்கு சென்று அங்குள்ள மைதானத்தை சுற்றி மரக்கன்றுகளை நட்டனர். அதோடு இந்த புது மணத்தம்பதிகள் அனைத்து மரக்கன்றுகளையும் இனிவரும் […]
