ராட்சத மரம் சாய்ந்து விழுந்ததால் சுமார் 6 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. கரூர் மாவட்டத்திலுள்ள வேலாயுதம்பாளையம், கந்தம்பாளையம், தவிட்டுபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்நிலையில் டி.என்.பி.எல் காகித ஆலை செல்லும் சாலையில் இருந்த ராட்சத மரம் நடுரோட்டில் விழுந்தது. மேலும் மரம் விழுந்ததால் மின்கம்பிகள் அறுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் அப் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த […]
