சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் திமுக கேள்வி எழுப்பும் என்று திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்தார். நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்னதாக நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “குடியரசுத் தலைவரின் உரையைத் தொடர்ந்து நடைபெறும் விவாதத்தில் சிஏஏ-தொடர்பாக திமுக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பும். பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய கட்சித் தலைவர்கள் பங்கேற்ற அனைத்துக் கட்சிக் […]
