தங்களைத் தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருநங்கைகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டத்தில் உள்ள திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் 80க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன. அந்த சமயம் அங்கு பத்துக்கும் மேற்பட்ட திருநங்கைகள் சென்று திருமணம் முடிந்த ஒரு மணமக்களுக்கு ஆசி வழங்கி பணம் கேட்டுள்ளனர். ஆனால் மணமக்கள் தரப்பினர் அவர்களுக்கு பணம் கொடுக்க மறுத்துவிட்டனர். இந்த சம்பவத்தால் மணமக்கள் தரப்பினருக்கும், திருநங்கைகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு விட்டது. இதுகுறித்து […]
