தமிழகத்தில் ஆகஸ்ட் 15 வரை செயல்பட்டுவந்த சிறப்பு ரயில்கள் பயணம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் 23ஆம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி வரை 6 கட்ட நிலையில் ஊரடங்கு அமலில் இருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். […]
