பொள்ளாச்சியில் இடைத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில் வாக்குச்சாவடி அலுவலர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள, பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் வரும் 9-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தல் ஆனைமலை ஒன்றியத்திலுள்ள திவான்சாபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவி, ஜமீன்முத்தூர் ஊராட்சியில் 6-வது வார்டு உறுப்பினர் பதவி, தென்குமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் போன்ற பதவிகளுக்கான தேர்தலாகும். இந்நிலையில் பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி செந்தில்குமார் தலைமையில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி […]
