தென்மாவட்டங்களில் மதுரை வழியாக கூடுதலாக ரயில்கள் இயக்கப்பட உள்ளது. கொரோனா ஊரடங்கால் ரயில்வே சேவை நிறுத்தப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக சரக்கு ரயில்கள் மற்றும் பார்சல் ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. தற்போது 70 சதவீத ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் தென்மாவட்டங்களில் இருந்து மதுரை வழியாக கூடுதலாக ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இதற்கான ஒப்புதலை ரயில்வே வாரியம் அளித்துள்ளது. அந்த ஒப்புதலில் நாகர்கோவில்-தாம்பரம் இடையே தினசரி அந்தியோதயா ரயில் இயக்கப்படுகிறது, கன்னியாகுமரி-ஹவுரா இடையே வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ளது, நெல்லை- […]
