தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் சரக்கு ரயில் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார். இவர் ஆம்பூர் ரயில் நிலையத்தின் அருகே இருக்கும் யார்டு பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்துள்ளார். அந்த சமயத்தில் ஜோலார்பேட்டை நோக்கி வந்த சரக்கு ரயில் அருண்குமார் மீது மோதியதில் அருண்குமார் தூக்கி வீசப்பட்டுள்ளார். இதில் அருண்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை […]
