Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

அம்பத்தூரில் இளைஞர் கடத்தல் – 3 பேர் கைது

அம்பத்தூரில் இளைஞரை காரில் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் : அம்பத்தூரில் இளைஞர் திலீப் குமாரை காரில் கடத்திய ஐவரில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். பணம் கொடுத்து ஏமாந்த ஏஜென்ட் சரவணன், தமிழ்சந்திரன், நரேஷ் குமார் கைது செய்யபட்டனர். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். அம்பத்தூரில் உள்ள ஒரு வீட்டில் கடத்தப்பட்ட திலீப் குமாரை புதுச்சேரியில் மீட்டு போலீசார் கொண்டு வந்தனர். வேலைக்காக திலீப்குமாரிடம் 10 லட்சம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் 1.39 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 1.39 கோடி ரூபாய் மதிப்பிலான 3.4 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. வெளிநாடுகளிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு பெருமளவில் தங்கம் கடத்தி வருவதாக சுங்கத்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கிடைத்த தகவலின் அடிப்படையில், சுங்கத் துறை அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது இலங்கையிலிருந்து விமானத்தில் வந்த இலங்கையைச் சேர்ந்த முகமது ரிஸ்கான் (47), அல்தாப்(51), முகமது ரிமாஸ்(33), முகமது ரபீக்(39), முகமது லகீர்(36) மற்றும் பெண் பயணி சம்சுல் வாடிகா(45) […]

Categories
மாநில செய்திகள்

பிச்சை எடுக்க… 2 வயது குழந்தை கடத்தல்… 24 மணி நேரத்தில் மீட்ட காவல்துறை..!!

சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பிச்சை எடுப்பதற்காக குழந்தையை கடத்திய தீபக் மண்டல் என்பவரை ரயில்வே காவல் துறையினர் 24 மணி நேரத்தில் கைது செய்து குழந்தையை மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மஜீனா என்பவர் சொந்த ஊருக்கு செல்வதற்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஜன 12ஆம் தேதி தனது இரண்டு வயது பெண் குழந்தை ரஷிதாவுடன் உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது எழுந்து பார்த்தபோது குழந்தை ரஷிதாவை காணவில்லை. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக […]

Categories
தேசிய செய்திகள்

”கிளி நீதிமன்றத்தில் ஆஜர்” டெல்லி காவல்துறையின் வினோதம் …..!

உயிரோடு இருந்த 13 கிளிகளை டெல்லி நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு நபர் ஷூ பெட்டிக்குள் கிளியை வைத்து கடத்த முயற்சி செய்துள்ளார். இதைத் தொடர்ந்து கிளியைப் பறிமுதல் செய்து, அந்த நபரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.பின்னர், டெல்லி நீதிமன்றத்தில் கிளியைக் கடத்த முயன்ற நபரையும், 13 கிளிகளையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அந்த நபர் மீது வனப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் 60 லட்சம் பணம் கேட்டு 3 வயது சிறுமி கடத்தல்.. பணிப்பெண் மற்றும் கள்ளக்காதலன் கைது..!!!

சென்னையில் 60லட்சம் பணம் கேட்டு 3 வயது சிறுமியை கடத்திய பணிப்பெண் மற்றும் கள்ளக்காதலன் ஆகிய இருவரையும் காவல் துறையினர்  கைது  செய்தனர் சென்னை  அமைந்தகரை  பகுதியை  சேர்ந்த  நந்தினி , அருள்ராஜ்  தம்பதியினரின்  3 வயது  மகள்  அன்விகா முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார். தம்பதியினர் பணிக்கு சென்று  வருவதால் சிறுமியை பராமரிப்பதற்கு   பணிப்பெண்ணாக  அம்பிகாவை   நியமித்துள்ளனர்  . இந்நிலையில் பணிப்பெண்  அம்பிகாவிடம்  சிறுமியை  விட்டுவிட்டு  நந்தினி  வீட்டில்  வேலை செய்து  கொண்டிருந்தார் […]

Categories

Tech |