சாலை விபத்துகளை குறைப்பதில் மற்ற மாநிலங்கள் தமிழகத்தை பின்பற்றி வருவதாக சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். சென்னை பெரு நகர் போக்குவரத்து காவல் சார்பில் 32வது சாலை பாதுகாப்பு மாதம் ஜனவரி 18 முதல் பிப்ரவரி 17ஆம் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை ஒட்டி சென்னை மெரினா கடற்கரையில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை சென்னை மாநகராட்சி காவல் ஆணையர் மகேஷ்குமார் அவர்கள் தொடங்கி வைத்தார். மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மெரினா […]
