சாலையில் சென்ற பேருந்தை காட்டு யானைகள் வழிமறித்ததால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள மஞ்சூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான சிறுத்தை, கரடி, காட்டு யானை, புலி போன்ற பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றனர். இந்த வன விலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் உணவு மற்றும் தண்ணீரை தேடி நுழைந்து அட்டகாசம் செய்துள்ளன. இந்நிலையில் மஞ்சூர்-கோவை சாலையில் காட்டு யானைகள் அடிக்கடி உலா வருவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். […]
