புதிய சீர்திருத்தங்கள் காரணமாக, நிறுவனங்களிடையே போட்டித்தன்மை அதிகரிக்கும், இதன் மூலம் நிலக்கரி உற்பத்தி அதிகரிக்கும் என்று மத்திய அரசு நம்புகிறது. வெளிநாட்டு நிறுவனங்களின் பங்கேற்பு காரணமாக, நிலக்கரியை வெட்டியெடுப்பதில் அதிநவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு உற்பத்தி உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சுரங்கத்துறையில் கோல் இந்தியா நிறுவனத்தின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்திய சுரங்கத்துறையில் தனியார் முதலீட்டுக்கு அனுமதி வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், தனியார் நிறுவனங்கள் வணிக நோக்கத்துடன் சுரங்கத்துறையில் ஈடுபடவும் அனுமதி வழங்க […]
