கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் இருந்து கரும்பு பாரம் ஏற்றி கொண்டு டிராக்டர் ஓன்று பெரம்பலூரில் உள்ள வேப்பந்தட்டை நோக்கி புறப்பட்டுள்ளது. இந்த டிராக்டரை ரவிச்சந்திரன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாலிகண்டபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் தாறுமாறாக ஓடி சாலையில் தலைகுப்புற கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ரவிச்சந்திரனை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]
