திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று முதல் வருகிற ஞாயிற்றுக்கிழமை வரை பொதுமக்கள் சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்படுகிறது. மேலும் பொதுமக்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். இதனை மீறி பொது இடங்களில் சுற்றி திரிபவர்கள் […]
