Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆண்டுதோறும் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்….. அருவியில் குவியும் சுற்றுலா பயணிகள்….!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் புகழ்பெற்ற அகஸ்தியர் அருவி அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் ஏராளமான பயணிகள் அருவிக்கு சென்று குளித்து மகிழ்கின்றனர். தற்போது மாணவ- மாணவிகளுக்கு காலாண்டு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனால் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு சென்று குளித்து மகிழ்ந்தனர். இனிவரும் நாட்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“தொடர் விடுமுறை எதிரொலி” கொடைக்கானலுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்….!!!!

தமிழகத்தில் இருக்கும் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்று கொடைக்கானல். இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் காலாண்டு தேர்வு முடிந்த பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு செல்கின்றனர். இதனால் நுழைவு வாயில் மற்றும் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு வத்தலகுண்டு- கொடைக்கானல் மலை பாதையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கிறது. மேலும் நகரின் பல முக்கிய இடங்களில் போக்குவரத்து […]

Categories

Tech |