மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையோர தடுப்பில் மோதிய விபத்தில் சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் நவீன் குமார் என்பவர் வசித்துவருகிறார். இவர் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டிக்கு தனது தாய், மனைவி மற்றும் குழந்தைகளுடன் காரில் சுற்றுலாவுக்காக சென்றுள்ளார். இவர்கள் அனைத்து சுற்றுலா தளங்களையும் சுற்றி பார்த்துவிட்டு, ஊட்டியிலிருந்து சொந்த ஊருக்கு செல்வதற்காக தலைகுந்தா பகுதிக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் திடீரென அவரது காரில் பழுது ஏற்பட்டதால், அப்பகுதியில் […]
