மூதாட்டியை கழிவறையில் வைத்து கொடுமைப்படுத்திய வளர்ப்பு மகன், மருமகள் இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் கோட்ஸ் நகரைச் சேர்ந்தவர் மரியமிக்கேலம்மாள் (95). இவரது வளர்ப்பு மகன் நிகோலஸ் (42), மருமகள் இந்திரா (34). இதனிடையே, நிகோலஸ் இந்திராவுடன் சேர்ந்த தனது வளர்ப்பு தாயை கொடுமைப்படுத்திவந்ததாக மாவட்ட சமூக நலத் துறை அலுவலர்களுக்கு புகார்கள் வந்தன. இந்தப் புகாரின்பேரில், சமூக நலத் துறை அலுவலர்களும், காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் தலைமையிலான காவல் துறையினரும் […]
