நாம் சமையலில் அதிகமா பயன்படக்கூடிய தக்காளி பல நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது. அவற்றின் சில வியக்கத்தக்க நன்மைகளையும் நமது உடலில் பல பிரச்சனைகளுக்கும் தக்காளி இப்படி ஒரு சிறந்த மருந்தாக பயன்படும் என்று பார்க்கலாம். தக்காளியில் நமக்கு தேவையான வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் வைட்டமின் பி6 போன்றவை அதிக அளவில் இருக்கும். அதில் இருக்கும மினரல்ஸ் பொட்டாசியம், மெக்னீசியம், காப்பர் மற்றும் பாஸ்பரஸ் போன்றவை உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கும். […]
