இன்றைய தினம் : 2019 ஜூன் 22 கிரிகோரியன் ஆண்டு : 173_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 174_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 192 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : கிமு 217 – திராசிமின் ஏரி போரில் ஹன்னிபால் கையசு பிளாமினியசு தலைமையிலான உரோமைப் படைகலைத் தோற்கடித்தார். 474 – யூலியசு நெப்போசு தன்னை மேற்கு உரோமைப் பேரரசராக அறிவித்தார். 1314 – இராபர்ட்டு புரூசு தலைமையிலான இசுக்கொட்லாந்துப் படைகள் இங்கிலாந்துப் படையினரைத் தோற்கடித்தன. இசுக்கொட்லாந்து தனது விடுதலையை மீண்டும் பெற்றது.[1] 1340 – நூறாண்டுப் போர்: இங்கிலாந்தின் மூன்றாம் எட்வர்டு தலைமையின் கீழ் இங்கிலாந்து கடற்படையினர் பிரெஞ்சுக் படைகளை முற்றாகத் தோற்கடித்தனர். 1374 – செருமனியின் ஆஃகன் நகரில் புனித ஜானின் நடனம் […]
வரலாற்றில் இன்று ஜூன் 24..!!
