இன்றைய தினம் : 2019 ஜூன் 22 கிரிகோரியன் ஆண்டு : 173_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 174_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 192 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 1305 – பிளெமிசு, பிரான்சியருக்கிடயே அமைதி உடன்பாடு எட்டப்பட்டது. 1532 – இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியும் பிரான்சின் முதலாம் பிரான்சிசும் புனித உரோமைப் பேரரசர் ஐந்தாம் சார்லசுக்கு எதிராக இரகசிய உடன்பாடு ஒன்றை ஏற்படுத்திக் கொண்டனர். 1565 – மால்ட்டா மீதான படையெடுப்பின் போது உதுமானியக் கடற்படைத் தளபதி திராகுத் இறந்தார். 1594 – அடிமைகளையும் பெறுமதியான பொருட்களையும் ஏற்றுச் சென்ற போர்த்துகல்லின் சிங்கோ சாகாசு கப்பல் ஆங்கிலேயக் கப்பல்களினால் தாக்கப்பட்டதில் 687 பேர் கொல்லப்பட்டனர்.[1] […]
வரலாற்றில் இன்று ஜூன் 23..!!
