இன்றைய தினம் : 2019 ஜூன் 22 கிரிகோரியன் ஆண்டு : 173_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 174_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 192 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : கிமு 168 – பித்னா போரில், உரோமர்கள் மக்கெதோனிய மன்னர் பெர்சியசை வென்றனர். பெர்சியசு சரணடைந்ததை அடுத்து மூன்றாம் மக்கெதோனியப் போர் முடிவுக்கு வந்தது. 813 – வெர்சினிக்கியாப் போரில், பல்காரியர்கள் பைசாந்திய இராணுவத்தை வென்றனர். பேரரசர் முதலாம் மைக்கேல் தனது பதவியை ஆர்மீனியாவின் ஐந்தாம் லியோவுக்குக் கையளித்தார். 1622 – போர்த்துக்கீசப் படையினர் மக்காவு போரில் டச்சு ஊடுருவலை முறியடித்தனர். 1633 – அண்டத்தின் மையம் பூமி அல்ல, சூரியன் என்ற தனது அறிவியல் கொள்கையை கலிலியோ கலிலி உரோமைத் திருச்சபைப் படைகளின் வற்புறுத்தலின் பேரில் […]
வரலாற்றில் இன்று ஜூன் 22..!!
