இன்றைய தினம் : 2019 ஜூன் 20 கிரிகோரியன் ஆண்டு : 171_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 172_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 194 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 1248 – ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் அரச அங்கீகாரத்தைப் பெற்றது. 1631 – அயர்லாந்தில் பால்ட்டிமோர் நகரம் அல்சீரியாவின் கடற்கொள்ளையாளர்களால் சூறையாடப்பட்டது. 1685 – மொன்மூத் இளவரசர் ஜேம்சு ஸ்கொட் இங்கிலாந்தின் அரசனாகத் தன்னைத் தானே அறிவித்தார். 1756 – பிரித்தானியப் படைவீரர்கள் கல்கத்தாவின் வில்லியம் கோட்டைக்கு அருகில் நவாபுகளினால் சிறைப்பிடிக்கப்பட்டனர். 1819 – அமெரிக்காவின் சவன்னா என்ற கப்பல் இங்கிலாந்தின் லிவர்பூல் நகரை அடைந்தது. அத்திலாந்திக்கைக் கடந்த முதலாவது நீராவிக் கப்பல் இதுவாகும். 1837 – விக்டோரியா பிரித்தானியாவின் பேரரசி ஆனார். 1840 – சாமுவெல் மோர்சு தந்திக்கான காப்புரிமத்தைப் பெற்றார். […]
வரலாற்றில் இன்று ஜூன் 20..!!
