இன்றைய தினம் : 2019 ஜூன் 18 கிரிகோரியன் ஆண்டு : 169_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 170_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 196 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 618 – லீ யுவான் சீனாவின் பேரரசராக முடிசூடினார். அவரது தாங் வம்சம் அடுத்த மூன்று நூற்றாண்டுகளுக்கு சீனாவை ஆண்டது. 656 – அலீ ராசிதீன் கலீபாக்களின் கலீபா ஆனார். 1429 – பிரெஞ்சுப் படையினர் ஜோன் ஆஃப் ஆர்க் தலைமையில் பாட்டேய் சமரில் ஆங்கிலேயப் படையினரத் தோற்கடித்தனர். நூறாண்டுப் போர்உச்சக்கட்டத்தை அடைந்தது. 1633 – இங்கிலாந்தின் முதலாம் சார்லசு இசுக்கொட்லாந்தின் மன்னராக எடின்பரோவில் முடிசூடினார். 1767 – ஆங்கிலேயக் கடற்படைத் தலைவர் சாமுவேல் வால்லிசு தாகித்தியை அடைந்த முதலாவது ஐரோப்பியர் […]
வரலாற்றில் இன்று ஜூன் 18..!!
