இன்றைய தினம் : 2019 ஜூன் 11 கிரிகோரியன் ஆண்டு : 162_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 163_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 203 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : கிமு 1184 – திராயன் போர்: எரடோசுதெனீசுவின் கணிப்பின் படி, திராய் நகரம் சூறையாடப்பட்டுத் தீயிடப்பட்டது. 631 – வடக்குப் போர்முனையில் சூயி வம்சத்தில் இருந்து தாங் அரசமரபுக்கு மாறும் போது கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க சீனப் பேரரசர் தாய்சோங் தங்கம், பட்டு ஆகியவற்றுடன் தனது தூதுவரை அனுப்பி வைத்தார். இதன் மூலம் 80,000 சீன ஆண்களும் பெண்களும் விடுவிக்கப்பட்டு சீனா திரும்பினர். 786 – மக்கா மீது அல் ஹசன் மேற்கொண்ட கிளர்ச்சி அப்பாசியர்களால் நசுக்கப்பட்டது. […]
வரலாற்றில் இன்று ஜூன் 11..!!
