இன்றைய தினம் : 2019 மே 05 கிரிகோரியன் ஆண்டு : 125_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 126_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 240 நாட்கள் உள்ளன . இன்றைய தின நிகழ்வுகள் 1215 – இங்கிலாந்தில் கிளர்ச்சியில் ஈடுபட்ட பிரபுக்கள் இங்கிலாந்தின் ஜான் மன்னருக்குத் தமது ஆதரவைத் தெரிவித்தனர். மாக்னா கார்ட்டாஉடன்படிக்கை கையெழுத்திடுவதற்கு இதுவும் ஒரு காரணமாயிற்று. 1260 – குப்லாய் கான் மங்கோலியப் பேரரசராக முடிசூடினார். 1494 – கிறித்தோபர் கொலம்பசு ஜமேக்காவில் தரையிறங்கி அதனை எசுப்பானியாவுக்காக உரிமை கோரினார். 1640 – இங்கிலாந்தின் முதலாம் சார்லசு மன்னர் குறுகிய-கால நாடாளுமன்றத்தைக் கலைத்தார். 1762 – உருசியாவும் புருசியாவும் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் அமைதி உடன்பாட்டை எட்டின. 1809 – சுவிட்சர்லாந்தின் ஆர்காவு மாகாணம் யூதர்களுக்கு குடியுரிமையை […]
வரலாற்றில் இன்று மே 05….!!
