வாய்க்கால்களில் பள்ளங்கள் அமைத்து மழை நீர் சேகரிக்கும் பணி தொடங்கியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் பூதலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் மூலம் விவசாயத் தொழிலாளர்கள் பலரும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். இந்நிலையில் கோடை காலத்தில் பெய்யும் கோடை மழை நீரை சேமிக்கவும் அதன் மூலம் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும் கிராமப்புறங்களில் உள்ள வாய்க்கால்களில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட […]
