பெங்களுருவில் இருந்து இன்று தமிழகம் திரும்பிய சசிகலா, அனைவருக்கும் வணக்கம். என் உடல் பூரண நலம் பெற வேண்டி வாழ்த்திய அத்தனை நல்லுள்ளங்களுக்கும் முதலில் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். தெய்வ அருளாலும், மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் என் அக்கா புரட்சித்தலைவி இதயதெய்வம் அம்மா அவர்களின் ஆசியால் நான் இந்த கொரோனாவில் இருந்து மீண்டு வந்து இருக்கின்றேன். உடல்நலம் பூரண குணமடைய உதவிய கர்நாடக அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் கர்நாடக அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். […]
