கோதாவரி – கிருஷ்ணா நதி இணைப்பே முதல் பணி என்று கூறிய நிதின் கட்கரிக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ள நிலையில் நிதின் கட்கரி தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டு வர கோதாவரி- கிருஷ்ணா நதிகளை இணைப்பது தான் எனது முதல் கடமை என்று பதிவிட்டிருந்தார். இதற்க்கு ஏராளமானோர் நிதின் கட்கரிக்கு பாராட்டுகளை தெரிவித்தனர். இது தொடர்பாக தமிழக பாஜகவின் ட்விட்டரில், இது தான் பாஜக […]
