தருமபுரி, கன்னியாகுமரி, ஈரோடு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஆட்சியராக பொறுப்பு வகித்த பாலச்சந்திரன் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். இந்நிலையில் இவர் கடந்த 9-ம் தேதி TNPSC தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். TNPSC தலைவர் பாலச்சந்திரன் பதவி ஓய்வு பெற்றதையடுத்து, தற்போது தேர்வாணையத்தின் உறுப்பினராக இருந்து வரும் முனியநாதன் ஐ.ஏ.எஸ் பொறுப்பு தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிய தலைவர் நியமிக்கப்படும் வரை, முனியநாதன் பொறுப்பு தலைவராக செயல்படுவார் என மனிதவளத்துறை தெரிவித்துள்ளது.
