அரசின் மெத்தன போக்கு மற்றும் காவல்துறையை கண்டித்து வரும் 3ஆம் தேதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். லண்டன் பயணத்தை முடித்துவிட்டு தமிழகம் திரும்பிய திருமாவளவன் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வேதாரண்யத்தில் சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையில் அம்பேத்கர் சிலையை உடைத்து உள்ளனர். இதற்கு காவல் துறை அதிகாரிகள் தான் காரணம் என்று திருமாவளவன் குற்றம் சாட்டினார். மேலும் காவல்துறையின் ஒத்துழைப்போடு தான் […]
