தமிழகத்தில் இன்று 37 மாவட்டத்திலும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 6,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,92,964 ஆக அதிகரித்துள்ளது. இன்று 5,210 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,36,793 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 60,375 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 20,75,522 ஆக இருக்கின்றது. […]
