வீட்டு உபயோக இணைப்புக்கான மின் அளவு கணக்கீடு குறித்த மின்வாரிய உத்தரவை ரத்து செய்ய கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால் மின் கணக்கீடு எடுக்க முடியவில்லை என்ற காரணத்தினால் முந்தைய மாதங்களில் செலுத்திய கட்டணத்தை மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கும் செலுத்தலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் மின் கணக்கீடு நடைபெற்று மின் கட்டணம் செலுத்துமாறு கூறப்பட்டுள்ளது. நான்கு மாத மின் நுகர்வை இரு இரண்டு மாத […]
