மதிய உணவுத் திட்டத்திலும், ரேஷன் கடையிலும் பயறு வகைகள் வினியோகிக்கப்படும் என்று உழவர் நலத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.. தமிழகத்தில் முதல்முறையாக வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.. அப்போது அவர் கரும்பு கொள்முதல் விலையை டன் ஒன்றுக்கு ரூபாய் 2,750 லிருந்து ரூபாய் 2,900 ஆக அதிகரிக்கப்படும்.. 2020 – 2021 நிதியாண்டில் ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கான ஊக்கத் தொகை ரூபாய் 40 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். […]
