தமிழ்நாட்டின் மாநகராட்சி, நகராட்சி, ஊரகம் (கிராம ஊராட்சி) மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப்பள்ளிகளில் (1 முதல் 5ஆம் வகுப்பு வரை) படிக்கும் 1,14,095 மாணவ, மாணவிகளுக்கு முதல் கட்டமாக காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக 33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் என்ற பெயரில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான இன்று, மதுரை நெல்பேட்டையிலுள்ள ஆதிமூலம் மாநகராட்சி பள்ளியில், 1 முதல் 5ஆம் […]
