தமிழக காவல்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து வழக்கில் நாளை பிற்பகல் பதில் மனுவை தாக்கல் செய்ய தவறினால் தமிழக உள்துறை செயலர், தமிழக காவல்துறை தலைவர் காணொளி வாயிலாக ஆஜராக வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரித்துள்ளது. கரூர் பகுதியைச் சேர்ந்த காவலர் மாசிலாமணி என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் காவல்துறையினர் குறைந்த ஊதியத்தில் பணி புரிந்து வருகின்றனர். மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா மாநிலங்களில் மட்டுமின்றி உகாண்டா நாட்டில் […]
