அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில் காலியாகவுள்ள 1,060 விரிவுரையாளர் பணி இடங்களை நிரப்புவதற்கான போட்டி தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி முடித்துள்ளது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களது சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்ற வருகிற 18 ஆம் தேதி வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்ச்சியடைந்த தேர்வர்கள் தங்களுக்கான ஆசிரியர் அனுபவ சான்றிதழில் தொழில்நுட்ப கல்வி கமிஷனரின் மேலொப்பம் பெற அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதனால் விண்ணப்பதாரர்கள் சென்னைக்கு வருவதை தவிர்க்கும் அடிப்படையில் மாவட்ட அளவில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான […]
