ஏப்ரல் 21 முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் மிக வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்திலும் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது. இன்று காலை தமிழக முதல்வர் பழனிசாமி இதுகுறித்து ஆலோசனை நடத்தினார். கடந்த வராம் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க மத்திய அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பயோமெட்ரிக் வருகை […]
