வாலிபர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வடுவூர் பகுதியை சேர்ந்த இரு சமூகத்தினருக்கு இடையே கடந்த ஜூன் மாதம் 28-ஆம் தேதி தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து இரு தரப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில் வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்காக சென்றுள்ளனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். […]
