போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஓட்டுநர் தனது குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள நெற்குணம் கிராமத்தில் வீரராகவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வந்தவாசி செம்பூர் சாலையில் இருக்கும் அரசு போக்குவரத்து பணிமனையில் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 8 மாதங்களாக உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் வீரராகவன் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். மேலும் வீரராகவனுக்கு சம்பளம் குறைவாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போக்குவரத்து பணிமனையில் இருக்கும் மேலாளரிடம் கேட்டபோது, […]
