திருத்தணியில் இளைஞரை ஹோட்டலுக்குள் புகுந்து வெட்டி கொலை செய்த 4 பேர் காவல் நிலையத்தில் தாமாகவே சரணடைந்தனர். திருத்தணியில் நீதிமன்ற வளாகம் அருகே மகேஷ் என்ற இளைஞரை 4 பேர் ஓட ஓட விரட்ட, உயிருக்கு பயந்து அருகில் இருந்த ஒரு ஓட்டலுக்குள் அவர் புகுந்துள்ளார். இருந்தும் விடாமல் ஓட்டலுக்கு சென்று 4 பேரும் அவரை கொடூரமாக வெட்டிக் கொலை செய்தனர். கைப்பந்து போட்டியில் தகராறு ஏற்பட்டதே இந்த கொலைக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து […]
