Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தூங்கும் போது நடந்த சம்பவம்… காத்திருந்த அதிர்ச்சி… காட்டிகொடுத்த CCTV கேமரா …!!

டிரைவரின் செல்போனை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த செல்போனை பறிமுதல் செய்தனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவிநாசியில் சரக்கு ஆட்டோ டிரைவரான தினேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூரில் உள்ள தென்னம்பாளையம் மார்க்கெட்டிற்கு ஆட்டோவில் சென்றுள்ளார். அங்கு மார்க்கெட்டின் முன்புறம் ஆட்டோவை நிறுத்தி விட்டு அவர் சிறிது நேரம் தூங்கிய போது, அங்கு வந்த மர்ம நபர்கள் ரூபாய் 12 ஆயிரம் மதிப்புள்ள தினேஷ்குமாரின் செல்போனை திருடி சென்றனர். இச்சம்பவம் குறித்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வேலையில் மும்முரம்…காட்டிய தொழிலாளி… நேர்ந்தது சோகம்…!!

உயரத்திலிருந்து கீழே விழுந்த தொழிலாளி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் லலித்ஓரான். இவர் பல்லடம் பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று தொழிற்சாலையில் ஏழடி உயரமுள்ள எந்திரத்தில் ஏறி நின்று சுத்தம் செய்யும் பணியைமேற்கொண்டுள்ளார். அப்போது அவருடைய கால் இடறி கீழே விழுந்தார். இதில் அவருடைய தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை   உடன் பணிபுரியும் தொழிலாளர்களால் மீட்கப்பட்டு பல்லடம் அரசு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தூங்கும் போது… திருடு போன செல்போன்… சிசிடிவி காட்சியால் சிக்கிய இருவர்…!!

செல்போன் திருடிய 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவிநாசி பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார். இவர் சரக்கு ஆட்டோ ஓட்டுனர். நேற்று காலை இவர் திருப்பூர் மார்க்கெட்டுக்கு ஆட்டோவில் வந்துள்ளார். இந்நிலையில் சரக்கு ஆட்டோவை  மார்க்கெட்டின் முன்புறம் நிறுத்திவிட்டு ஆட்டோவில் தூங்கியுள்ளார். பின்னர் எழுந்து பார்த்தபோது ஆட்டோவில் இருந்த ரூபாய் 12 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் காணாமல் போனது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து அவர் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“புத்தாண்டு ஸ்பெஷல்” ஒரே நாளில் 15 குழந்தைகள்… மருத்துவமனையில் நெகிழ்ச்சி சம்பவம்…!!

அரசு மருத்துவமனையில் புத்தாண்டு தினத்தில் 15 குழந்தைகள் பிறந்துள்ள சம்பவம் அனைவரின் உள்ளத்தையும் நெகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது திருப்பூரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் புத்தாண்டு திருநாளன்று 15 குழந்தைகள் பிறந்துள்ளன. இதனைப் பற்றி மருத்துவர்கள் கூறும் பொழுது திருப்பூர் அரசு மருத்துவமனையில் சராசரியாக ஒரு நாளைக்கு 1௦-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறப்பது வழக்கம். மேலும் மற்ற மாவட்டங்களை ஒப்பிடும்போது திருப்பூரில் குழந்தை பிறப்பு என்பது அதிகமாகவே காணப்படும். இதற்கு காரணம் திருப்பூர் தொழில் நகரமாக விளங்குவதும், […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சுகாதார சீர்கேடு…! குவிந்து கிடக்கும் குப்பைகள்…! முகம் சுளிக்கும் வியாபாரிகள்…!

சாலைகளில் குப்பைகள் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசுவதால் குப்பை தொட்டி அமைத்து தர வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காதர் பேட்டை ஆடை விற்பனைக்கு பெயர் பெற்றது.  இவ்விடத்திற்கு தினமும் ஏராளமான வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகள் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து ஆடைகளை வாங்கி செல்கின்றனர்.  இவ்விடத்தில் சில்லறை மற்றும் மொத்த ஆடை விற்பனை கடைகள் செயல்படுகிறது.  இக்காரணத்தினால் கடையில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்படும்.  ஆனால் மிகவும் பிரபலமான இவ்விடத்தில் குப்பைத்தொட்டி வசதி இல்லை. […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திருப்பூரில் பரபரப்பு : ஜாதிப் பெயரை கேட்ட காவலர்….. ஆயுதப்படைக்கு மாற்றம்…!!

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியில் மாஸ்க் அணியாத நபரிடம் காவலர் காசிராஜன் என்பவர் ஜாதி பெயரை கேட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் அந்த இளைஞரிடம் சென்று ஜாதி பெயரை கேட்பதை அங்கிருந்தோர் வீடியோவில் பதிவு செய்து இணையத்தில் வெளியிட அது வைரலாகி, உயரதிகாரிகள் பார்வைக்கு செல்ல, அவர்கள் காவலரான காசிராஜனை  ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளனர். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காது என எஸ்பி திஷாமிட்டல் உறுதியளித்துள்ளார். 

Categories
திருப்பூர் மாநில செய்திகள்

உபியை தொடர்ந்து….. தமிழகத்திலும் கொடூரம்…. 22 வயது இளம்பெண் கூட்டு பலாத்காரம்…!!

தமிழகத்தில் 22 வயது இளம்பெண் ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.  வட மாநிலத்தைச் சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் பணிக்காக திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வந்துள்ளார். பணி செய்ய வந்தவரை அவருடன் பணிபுரிந்து வரும் வேலையாட்கள் 6 பேர் கொண்ட கும்பல் தூக்கிச் சென்று கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வடமாநில பெண்தானே, […]

Categories
டெக்னாலஜி திருப்பூர் மாவட்ட செய்திகள்

கவலைப்படாதீங்க… “டிக் டாக்கிற்கு பதில் புதிய செயலி”… அறிமுகப்படுத்தி அசத்தும் இளைஞர்கள்..!!

டிக் டாக்கிற்கு பதிலாக மற்றொரு செயலியை அறிமுகப்படுத்தி திருப்பூரை சேர்ந்த இளைஞர்கள் அசத்தியுள்ளனர். இந்தியா – சீனா இடையே கல்வான் பள்ளத்தாக்கில் பதற்றம் நிலவி வருவதன் காரணமாக சீன பொருட்களை இந்தியர்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. அதே சமயம் சீன நிறுவனங்களுடைய தயாரிப்புகளான மொபைல்ஃபோன் செயலிகள் தகவல்களைத் திருடுவதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து டிக்டாக், ஹலோ  உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதற்கு டிக் டாக் பிரபலங்கள் […]

Categories
கோயம்புத்தூர் திருப்பூர் மாவட்ட செய்திகள்

இ-பாஸ் இல்லாததால்….. இளம்பெண்ணுக்கு நடுரோட்டில் தாலி கட்டிய இன்ஜினியர்….!!

திருப்பூர் அருகே தமிழக கேரள மாநிலங்களின் எல்லைப்பகுதியில் இளஞ்ஜோடிகள் தாலிகட்டி திருமணம் செய்து கொண்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மார்ச் 23ஆம் தேதி அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு  ஐந்தாவது கட்ட நிலையில் தொடர்ந்து வரும் போதிலும், பல்வேறு தளர்வுகள் 5 ஆம் கட்ட  ஊரடங்கில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அரசு தொடர்ந்து தடை விதித்துள்ளது. மீறி நடக்கும் பட்சத்தில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

குடிமகன்களே…… குடையுடன் வாங்க…… மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள்….!!

திருப்பூரில் மதுபாட்டில்கள் வாங்க வரும்போது  குடையுடன் வரவேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கும் போதிலும், ஒரு சில தளர்வுகளுடன் தனிக் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அந்த வகையில், டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, வருகின்ற மே 7-ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் சென்னையை தவிர தமிழகத்தின் மற்ற அனைத்து இடங்களிலும் திறக்கப்பட்டு மது […]

Categories
திருப்பூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருப்பூரில் ஏற்றுமதி சார்ந்த பின்னலாடை நிறுவனங்கள் இயங்க அனுமதி : மாவட்ட ஆட்சியர்..!

திருப்பூரில் வரும் 6ம் தேதி முதல் ஏற்றுமதி சார்ந்த பின்னலாடை நிறுவனங்கள் நிபந்தனைகளுடன் இயங்க அம்மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்துள்ளார். மேலும், தொழிலாளர்களை நிறுவனங்களே வாகன வசதி செய்து கொடுத்து அழைத்து வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல, சமூக இடைவெளியை கடைபிடிப்பதோடு தொழிலாளர்கள் உடல்நலனை அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விருப்பப்பட்டால் அரசின் அனுமதியோடு சொந்த ஊர் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் […]

Categories
கோயம்புத்தூர் திருப்பூர் மாவட்ட செய்திகள்

கொரோனா…. கொசு…. 2 தொல்லையும் தாங்க முடியல…. 5 பேர் மருத்துவமனையில் அனுமதி….!!

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 5 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் அதிகளவில் பரவி பெரும் மதிப்பை ஏற்படுத்தி இருந்தது. குறிப்பாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் அதனுடைய பாதிப்பு அதிகமாக இருந்தது. இந்த வருடமும் அந்த இரண்டு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.  சில நாட்களுக்கு முன்பு நீலகிரி மாவட்டத்தில் மருத்துவராக பணி புரிந்த நபர் ஒருவர் டெங்கு […]

Categories
திருப்பூர் மாநில செய்திகள்

ஒன்று கூடி வீடியோ பதிவு….. கேள்விக்குறியான சமூகஇடைவெளி…… மக்கள் மீது போலீஸ் வழக்கு பதிவு….!!

திருப்பூரில் சமூக இடைவெளியை கேள்விக்குறியாக்கும் விதமாக ஒன்றுகூடிய மக்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை மட்டுமே வாங்க வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வெளியே வரும் சமயங்களிலும் முக கவசம் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளியை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்ற அறிவுரையும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் […]

Categories
திருப்பூர் மாநில செய்திகள்

திருப்பூரில் சானிடைசர் ஸ்பிரே சுரங்கப்பாதை – ஆட்சியர் விஜய கார்த்திகேயனுக்கு குவியும் பாராட்டுகள்!

கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நிலையில் காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைக்காக மக்கள் தினமும் வெளியே வந்து செல்கின்றனர். இந்த நிலையில் நாட்டிலேயே முதன் முறையாக திருப்பூரில் சானிடைசர் ஸ்பிரே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. தென்னம்பாளையம் என்ற பகுதியில் உள்ள காய்மறி மார்க்கெட்டில் ஆட்சியர் விஜய கார்த்திகேயன் அவர்கள் தனியார் நிறுவனம் ஒன்றின் உதவியோடு கிருமி நாசினி சுரங்கம் ஒன்றை அமைத்துள்ளார். 16 அடி நீளம், […]

Categories
திருப்பூர் மாநில செய்திகள்

பதவிக்கு ஆசை….. தன்னை தானே வெட்டி கொண்டு நாடகம்….. திருப்பூரில் பரபரபரப்பு….!!

உயர் பதவிக்கு ஆசைப்பட்டு இந்து மக்கள் கட்சியின் பிரமுகர் தன்னைத்தானே வெட்டி கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரில் இந்து மக்கள் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர் நந்தகோபால் என்பவர் தன்னை மாற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் வெட்டி விட்டு தப்பி சென்றதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்த தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், அவரை மீட்டு உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். பின் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் முன்னுக்குப் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பாஜக பேரணி….. பிரியாணிக்கு ஆபத்து….. காப்பாத்துங்க…. காவல் நிலையத்தில் இளைஞர்கள் மனு….!!

திருப்பூரில் இன்று பாஜகவினர் பேரணி நடத்த உள்ளதை முன்னிட்டு பிரியாணிக்கு பாதுகாப்பு வழங்க கோரி பிரியாணி சங்கத்தினர் காவல்நிலையத்தில் மனு அளித்துள்ளனர். திருப்பூரில் இன்று குடியுரிமை சட்ட மசோதாவிற்கு ஆதரவாக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் மிகப்பெரிய பேரணி நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். அதற்கான அனுமதியும் காவல்நிலையத்தில் வாங்கிவிட்டனர். இந்நிலையில் பெரிய கடை வீதி வழியாக அவர்கள் செல்லும் பொழுது ஏராளமான பிரியாணி கடைகள் இருப்பதால் பிரியாணி சங்கத்தினர் பாஜக உறுப்பினர்களிடமிருந்து பிரியாணியையும், பிரியாணி அண்டாவையும் பாதுகாக்கவேண்டும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

+1… +2…. மாணவர்கள் கவனத்திற்கு….. இந்த தப்ப பண்ணிடாதீங்க….. அப்புறம் 3 வருஷம் வருத்தப்படுவீங்க….!!

தமிழகத்தில் +1, +2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு தொடங்க உள்ள நிலையில், ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவோர் அடுத்த 3 வருடங்களுக்கு தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் என தேர்வு வாரிய இணை இயக்குனர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வருகின்ற மார்ச் 2-ஆம் தேதி பிளஸ் டூ மாணவர்களுக்கும்,  மார்ச் நான்காம் தேதி பிளஸ் 1 மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு தொடங்க இருக்கிறது. இதை முன்னிட்டு திருப்பூரில் மாவட்ட அளவிலான கூட்டம் நடைபெற்றது. இதில், திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கஷ்டப்பட்டு உழைச்சேன்….. என் மகளுக்கு என்ன செய்ய போறேன்….. 50பவுன் நகை கொள்ளை….. விவசாயி கதறல்….!!

திருப்பூர் அருகே வங்கியில் வைத்திருந்த 50 பவுன் நகை கொள்ளை போனதை அறிந்த விவசாயி கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பாரத ஸ்டேட் வங்கியின் பெட்டகத்தை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை அடித்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் அதில் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த  50 பவுன் நகையை பறிகொடுத்த விவசாயி கண்ணீர் மல்க வேதனையுடன் பேட்டி அளித்துள்ளார். அதில், விவசாய தொழிலில் பொருத்தவரையில் கடின உழைப்பு போட்டால்தான் வருமானம் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அதிவேகம்….. வேகத்தடையில் வண்டியை பறக்கவிட்ட வாலிபர் மரணம்….. திருப்பூர் அருகே சோகம்….!!

திருப்பூர்  அருகே வேகத்தடையில் மோதி வாலிபர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் கூட்டாத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ். இவரும் அதே பகுதியை சேர்ந்த, இவரது நண்பருமான மணி ஆகியோர் திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள நடுவுசேரியில் இருக்கும் பால் தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்றைய தினம் இரவு நடுவு சேரியிலிருந்து   அவிநாசி நோக்கி இரு சக்கர வாகனத்தில் இருவரும் சென்று கொண்டிருந்தனர். செல்லும் வழியில் வேகத்தடை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

6 ஆம் வகுப்பு சிறுமி….. கடத்த முயற்சி….. வடமாநில இளைஞருக்கு போலீஸ் வலைவீச்சு…..!!

திருப்பூர் அருகே 6 ஆம் வகுப்பு மாணவியை வடமாநில இளைஞர் கடத்த முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் சத்யா நகரைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளரின்  11 வயது மகள் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 6ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவி வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு 25 வயதிருக்கும் வாலிபர் ஒருவர் மாணவியின்  வாயைப் பொத்தி தூக்கிச் செல்ல […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பேங்க்கில் வேலை….. ரூ25,00,000 மோசடி….. ஏமாந்த விவசாயி போலீசில் புகார்….!!

திருப்பூர் அருகே வங்கியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூபாய் 25 லட்சம் மோசடி செய்ததாக விவசாயி ஒருவர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். திருப்பூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் ரத்தினசாமி என்பவர் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.  அந்த மனுவில் என் பெயர் ரத்தினசாமி. நான் விவசாய தொழில் செய்து வருகிறேன். திருப்பூரில் இருப்பதால்  பனியன் தொழிலும் எனக்கு நன்கு தெரியும். விவசாயம் ஒருபுறம் பார்க்க மறுபுறம் பனியன் கம்பெனியில் சூப்பர்வைசராக பணியாற்றி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திருப்பூருக்கு ஆபத்து….. கடையடைப்புக்கு தயங்க மாட்டோம்….. இந்து முன்னணி தலைவர் பேட்டி….!!

திருப்பூரை காக்க கடையடைப்பு போராட்டம் நடத்த தயங்க மாட்டோம் என்று இந்து முன்னணியின் மாநில தலைவர் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் கொங்கு பகுதியை சேர்ந்த இந்து முன்னணியின் கோட்ட செயலாளர் மோகன சுந்தரம் என்பவர் அவரது காரை வீட்டு முன் நிறுத்தி விட்டு உள்ளே சென்று இருந்த சமயத்தில் அங்கே வந்த மர்ம நபர்கள் கார் மீது தீ வைத்துக் கொளுத்தி சென்றனர். இதில், கார் முழுவதும் எரிந்து கருகியது. இது குறித்து காவல் நிலையத்தில் புகாரளிக்க […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஒழுங்கா கட்டல….. குட்டி போட்ட வட்டி….. ரூ1,10,00,000….. வீட்ட காலிபண்ணுங்க….. பேங்க் நோட்டீஸ்….!!

திருப்பூர் அருகே வட்டியை ஒழுங்காக கட்டாததால் வீடு, குடோன் உட்பட 71 சென்ட் நிலத்தை விசைத்தறி வியாபாரியிடம் இருந்து வங்கி ஊழியர்கள் ஜப்தி செய்து உள்ளனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள சின்னிய கவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவர் விசைத்தறி வியாபாரி ஆவார். விசைத்தறி கூடம் அமைப்பதற்காக கடந்த 2011ஆம் ஆண்டு அவருடைய வீடு மற்றும் விசைத்தறி குடோன் உள்ளிட்ட 71 சென்ட் நிலத்தை பாங்க் ஆப் இந்தியா வங்கியில் அடமானம் வைத்து ரூபாய் ஒரு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வெடித்து சிதறிய சிலிண்டர்….. பற்றி எரிந்த வீடு…. கணவன்-மனைவி படுகாயம்….. திருப்பூர் அருகே சோகம்…!!

திருப்பூர் அருகே சிலிண்டர்  வெடித்த விபத்தில் கணவன் மனைவி இருவரும் பலத்த காயம்  அடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் கருவம்பாளையம் பகுதியை  அடுத்த தொடக்கப்பள்ளி தெருவில் முதல் மாடியில் கணவன் மனைவி இருவர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றைய தினம் மாடியின் ஒரு பகுதியில் உள்ள ஓலைக் கொட்டகையில் மனைவி சமையல் செய்து வர கணவன் மனைவிக்கு உதவி செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென சிலிண்டர் கசிவு காரணமாக சிலிண்டரின் மேற்பகுதியில் தீப்பற்றி எரிந்தது. இதை பார்த்து அதிர்ச்சி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தனி வீடு….. வாடகைக்கு எடுத்து…. அடுத்தவன் மனைவியுடன் உல்லாசம்…. கணவன் தற்கொலை…. கிராம நிர்வாக அதிகாரி கைது….!!

மனைவியின் கள்ளக் காதலால் ஏற்பட்ட அவமானத்தால்  கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் உப்புத்துறை பாளையத்தில்  வசித்து வருபவர் வேலுச்சாமி. இவர் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுதா தாராபுரம் பகுதியில் உள்ள தாலுகா அலுவலகத்தில் உதவி அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்றைய தினம் வேலுச்சாமி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் காவல் நிலைத்தில் தகவல் தெரிவிக்க […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மனைவியுடன் தகராறு… தூக்குப் போட்டுக் கொண்ட கணவன்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தாராபுரத்தை சேர்ந்தவர் வேலு இவரது மனைவி சுதா. சுதா வருவாய் அலுவலராக பணிபுரிந்து வருகிறார். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக வேலு  சண்டை போட்டுக்கொண்டு உப்புத்துறை பாளையத்தில் இருக்கும் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். வேலுவின் தாயார் கடந்த இரண்டு தினங்களாக வெளியூர் சென்றிருந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த வேலு மனவேதனையுடன் இருந்தமையால்  வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பெண் தீக்குளித்து தற்கொலை – போலீஸ் விசாரணை

இரண்டு பிள்ளைகளின் தாய் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளக்கோவில் அருகே அறிவொளி நகரை சேர்ந்தவர் விஜயா. விஜயாவின் கணவர் ராமசாமி. இத்தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். ராமசாமி  தனது மகன் மற்றும் மகளை வெளியில் அழைத்துச் சென்றுள்ள சமயம் வீட்டில் தனியாக இருந்த விஜயா திடீரென தீக்குளிக்க தனக்குத் தானே நெருப்பு வைத்துள்ளார். இதனால் உடல் முழுவதும்நெருப்பு  பரவி வலி தாங்க முடியாமல்அலறல் போட்டுள்ளார் விஜயா. விஜயாவின் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வீணாக ஓடிய நீர்….. நடுரோட்டில் வேஷ்டி…. சட்டையை கழட்டி…. திமுக செயலாளர் ஆனந்த குளியல்….!!

திருப்பூர் அருகே வீணாகும் தண்ணீரை சரிசெய்ய கோரி நடுரோட்டில் வேஷ்டி சட்டையை கழட்டி முன்னாள் திமுக செயலாளர் குளியல் போட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பூர் மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சென்னையை காட்டிலும் அதிகமான தண்ணீர் பஞ்சம் விரைவில் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், அங்குள்ள மக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வெங்கடேஸ்வரா நகர் பகுதிக்கு தண்ணீர் வினியோகிக்க பயன்படும் குழாய் ஒன்றில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலைகளில் வீணாக […]

Categories
மாநில செய்திகள்

ஸ்மார்ட் சிட்டி திட்டம்: வேலூர், திருப்பூர்க்கு கெளரவம்..!!

இந்தியாவில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களில் மந்தமாக இருக்கும் 20 நகரங்களுக்கு வழிகாட்டி  உதவுவதற்காக சிறப்பாக செயல்படும் பிற 20 நகரங்கள் கொண்ட பட்டியல் அறிவிக்கப்பட்டது. வழிகாட்டும் 20 நகரங்கள் பட்டியலில் தமிழகத்தில் திருப்பூர், வேலூர் ஆகிய நகரங்களும் இடம்பெற்றுள்ளன. இந்தியாவின் 100 நகரங்களை ஸ்மார்ட் நகரங்களாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் மிகவும் மந்தமாக பணிகள் நடைபெற்று வரும் கடைசி 20 இடங்களில் உள்ள நகரங்களில் பணிகளை விரைவுபடுத்த மத்திய அரசு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எனக்கு மகன் இருக்கிறான்…. போதும் முடியாது…. “நெருங்கி பழக மறுப்பு” தாயை கொன்ற காமுகன் கைது…!!

திருப்பூரில் நெருங்கி பழக மறுத்த குற்றத்திற்காக பெண்ணை கொலை செய்த  கூட்டுறவு வங்கி இயக்குனர் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே வசித்து வருபவர் வேலுமணி. இவருக்கு ஒரு மகன் ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளன. மகள் திருமணம் ஆன நிலையில் கணவருடன் வசித்து வருகிறார். மகன் திருப்பூரில் உள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறான். வேலுமணி அதே பகுதியில் உள்ள கழிவுபஞ்சு குடோனில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். தினமும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

94,521 ஏக்கருக்கு….. 4,700 கன அடி நீர்…. முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு….. விவசாயிகள் மகிழ்ச்சி….!!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி அணையிலிருந்து முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம்  உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி  அணையை கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் ஆகியோர் திறந்து வைத்தனர். இதன் மூலம் கோவை திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 94,521 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. முதல் போக பாசனத்திற்கு 4,700 மில்லி கன அடி நீருக்கு குறையாமல்  திறக்கப்பட்டுள்ளது.

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“வேலைக்காரி செய்த வேலை” 2 வயது பெண் குழந்தை கடத்தல்….. மீட்பு பணியில் போலீஸ் தீவிரம்….!!

பல்லடத்தில் கடத்தப்பட்ட இரண்டு வயது பெண் குழந்தையை மீட்கும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டிருக்கின்றனர்.  திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை  சேர்ந்தவர் சுடலை ராஜன். சண்டை காரணமாக அவருடைய மனைவி செல்வி தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். அவர்களது 2 வயது குழந்தை மகாலட்சுமியை  சுடலை ராஜனும் அவரது தந்தை மாரியப்பனும் பராமரித்து வந்தனர். இதனிடையே சுடலைராஜன் பழனி செல்ல மாரியப்பன் தனது பேத்தியை பார்த்துக்கொள்ள பெண் ஒருவரை வீட்டில் தங்க வைத்துள்ளார். இதையடுத்து  மகாலட்சுமியும், குழந்தையை பராமரிக்க அழைத்து வரப்பட்ட […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“காதலுக்கு தூது” 15 வயது சிறுமி கர்ப்பம்….. 17 வயது சிறுவன் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது…!!

திருப்பூரில் 15 வயது சிறுமியை  17 வயது சிறுவன் கர்பமாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டடம் பகுதியை சேர்ந்தவர் ராமன். இவருக்கு 15 வயதில் மகள் உள்ளார். இவரது வீட்டின் அருகிலேயே அவரது உறவினர் மகனான 17 வயது சிறுவன் ஒருவர் வசித்து வந்துள்ளார். அவனுக்கு அவனது பள்ளியில் படிக்கும் வேறொரு பெண்ணின் மீது காதல் ஏற்பட்டது. படிப்பின் மீது ஆர்வம் இல்லாமல் பள்ளி படிப்பை முடித்துக்கொண்ட 15 […]

Categories
அரசியல் திருப்பூர் மாவட்ட செய்திகள்

சசிகலா வெளியே வந்தால் அதிமுகவில் மாற்றம் நிகழும்’! – எம்.எல்.ஏ. தனியரசு

சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் சசிகலா எடுக்கும் முடிவு அதிமுகவில் பெரிய தாக்கமும் மாற்றமும் நிகழலாம் என எம்.எல்.ஏ. தனியரசு தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்தது. இதில் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் திருப்பூர் தெற்கு, வடக்கு பல்லடம், காங்கேயம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர். ஆய்வு கூட்டத்தைத் தொடர்ந்து காங்கேயம் சட்டப்பேரவை உறுப்பினர் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இரண்டு வயது குழந்தை கடத்தல்… இளம்பெண் மாயம்..!!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இரண்டு வயது குழந்தை கடத்தல்: இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். பல்லடம் அடுத்த அரசன் காட்டைச் சேர்ந்த சுடலை ராஜன் என்பவரின் குழந்தை மகாலட்சுமி, கடத்தப்பட்ட குழந்தையாகும், மனைவியை பிரிந்து வாழும் சுடலை ராஜன் மற்றும் அவரது தந்தை மாரியப்பனும்  குழந்தையை  பராமரித்து வந்துள்ளனர். இந்நிலையில் பழனி முருகன் கோவிலுக்கு சென்ற மாரியப்பன், அங்கிருந்து இளம் பெண் ஒருவரை  அழைத்து வந்துள்ளார், அந்த இளம்பெண் மாரியப்பன் தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டில் இருந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்று வருவதற்குள்….. 1 1/2 வயது குழந்தை…. வாளி நீரில் மூழ்கி மரணம்…. திருப்பூர் அருகே சோகம்…!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே 1 ½ வயது குழந்தை தண்ணீர் வாளிக்குள் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   பல்லடம் அருகே உள்ள வடுகம்பாளையத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி மோகனா. பிரபாகரன் பல்லடம் மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வர மோகனா வீட்டில் இருந்து தனது ஒன்றரை வயது குழந்தையை பார்த்துக் கொள்வார். இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி பாலாஜி நகரில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு கணவன் மற்றும் குழந்தையுடன் சென்றார். பொங்கல் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“சப்-இன்ஸ்பெக்டர் பணி” எழுத்து தேர்வு…… 2,194இல்…… 1,603 பேர் பங்கேற்பு…..!!

திருப்பூர் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வுக்கு 2,194 பேர் விண்ணப்பிருந்த நிலையில் 1603 பேர் மட்டுமே தேர்வு எழுதினர்.  தமிழ்நாடு சீருடை பணியாளர் குழுமத்தின் சார்பில் திருப்பூர் மாவட்ட சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு இன்று திருப்பூரில் நடைபெற்றது. இந்த தேர்வுக்கு திருப்பூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள 2194 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதன்படி 1,093 பேருக்கு திருப்பூர்குமரன் மகளிர் கல்லூரியிலும், 891 பேருக்கு இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும்  தேர்வுகள் எழுத வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேர்வு எழுத வரும் விண்ணப்பதாரர்கள் […]

Categories
அரசியல் திருப்பூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

குலுக்கல் முறையில் வார்டு உறுப்பினர் தேர்வு!

 அவினாசி ஊராட்சி ஒன்றியம் அய்யம்பாளையம் ஊராட்சியில் குலுக்கல் முறையில் வார்டு உறுப்பினர் தேர்வு செய்யப்பட்டனர். திருப்பூர் மாவட்டம் அவினாசி ஊராட்சி ஒன்றியம் அய்யம்பாளையம் ஊராட்சியில் ஒன்றாவது வார்டு பகுதியான சின்ன ஓலப்பாளையம் கிராமத்தில் போட்டியிட்ட அங்கப்பன், பொன்னுசாமி ஆகிய இருவரும் தலா 47 வாக்குகள் பெற்று சம அளவில் இருந்தனர்.இந்நிலையில், இரு தரப்பும் ஒப்புதல் கொடுத்ததை அடுத்து தேர்தல் நடத்தும் அலுவலர் குலுக்கல் முறையில் தேர்வு செய்ததில் அங்கப்பன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

10 லிட்டர் எரி சாராயம்…… வீட்டுக்குள் கள்ள தொழில்…… உரிமையாளர் கைது….!!

திருப்பூர் அருகே ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் அருகே கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட செந்நெறி புத்தூரில் உள்ள ஒரு வீட்டில் எரிசாராயம் பதிக்கி வைக்கப்பட்டிருப்பதாக சேலம் மண்டலம் மத்திய புலனாய்வு பிரிவு காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் ஆய்வாளர் ராஜா தலைமையிலான குழு பொள்ளாச்சி மதுவிலக்கு காவல்துறை அதிகாரிகள் உதவியுடன் வீட்டில் பதுக்கப்பட்டிருந்த 10 லிட்டர் மதிப்பிலான எரிசாராயம் பறிமுதல் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

200ரூபாய் லஞ்சம் கேட்டதோடு … ஆபாசமாக பேசிய உதவி ஆய்வாளர்…!!

ஆபாசமாக பேசியதாக கூறி சரக்கு ஆட்டோ ஓட்டுநர் தீக்குளிக்க முயன்ற நிலையில் பொதுமக்கள் உதவி ஆய்வாளர் இடம் வாக்குவாதம் செய்தனர். திருப்பூரில் உதவி ஆய்வாளர் ஒருவர் கூலிபாளையம் 4 ரோடு பகுதியைச் சேர்ந்த அர்ஜுன் காலை கட்டிட பொருட்களை ஏற்றிக்கொண்டு புதிய பேருந்து நிலையம் நோக்கி வந்திருக்கிறார். சோதனைச் சாவடியில் அவரை மடக்கிய ஊத்துக்குளி காவல்நிலைய உதவி ஆய்வாளர் ராஜமூர்த்தி சீட் பெல்ட் அணிய வில்லை என கூறி 200 ரூபாய் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் சீட் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

செய்வினை எடுப்பதாக கூறி பொதுமக்களிடம் பணம் பறிக்கும் பொறியியல் பட்டதாரிகள் …!!

செய்வினை எடுப்பதாக கூறி பொதுமக்களிடம் பணம் பறிக்கும் சம்பவத்தில்  ஈடுபட்ட பொறியியல் பட்டதாரி இளைஞர்கள் இருவரை திருப்பூர் போலீசார் கைது செய்தனர்.   திருப்பூர் பகுதியில்  மகேஸ்வரன் என்பர் வீட்டிற்கு ஜோதிடம் பார்ப்பதற்காக வந்த இரண்டு இளைஞர்கள் அவரது குழந்தைக்கு யாரோ செய்வினை வைத்து விட்டதாக கூறினார் .மேலும் செய்வினை எடுக்க வேண்டுமென்றால் அதற்கு 4500 ரூபாய் செலவாகும் என்றும் தெரிவித்தனர். அவர்கள் மேல்  சந்தேகம் அடைந்த மகேஸ்வரன் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார் .   விரைந்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“கனமழை” சாலை வெள்ளத்தில் சிக்கி கவிழ்ந்த லாரி….. திருப்பூரில் பரபரப்பு…!!

திருப்பூரில் பெய்து வந்த கனமழையின் காரணமாக சாலையில் ஓடிய வெள்ள நீரில் லாரி சிக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகளவில் காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை திடீரென்று பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. திருப்பூர் முழுவதும் பரவலாக பெய்த கனமழையின் காரணமாக ஆங்காங்கே சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது.  இதன்காரணமாக வாகனஓட்டிகள், பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர். இந்நிலையில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அரசு பள்ளி மரங்களை வெட்டியதால் கொந்தளித்த ஊர் மக்கள்…… தலைமையாசிரியரிடம் தீவிர விசாரணை….!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் அரசு பள்ளியில் அனுமதியின்றி மரங்கள் வெட்டப்பட்டது தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியை  அடுத்த நம்பியம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி வளாகத்தில் இருந்த இரண்டு பெரிய மரங்கள் தலைமையாசிரியர் செல்வமணி உத்தரவின் பெயரில் வெட்டி சாய்க்கப்பட்டன. இதையடுத்து தகவல் அறிந்த பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் விஏஓ தங்கராஜ் ஆகியோர் […]

Categories
திருப்பூர் பல்சுவை மாவட்ட செய்திகள்

“தீபாவளி ஸ்பெஷல்” சிறப்பு சலுகையுடன் போதை பொருள் விற்பனை……. 10கிலோ பறிமுதல்…. 2 பேர் கைது…!!

திருப்பூர் அருகே கஞ்சா விற்க முயன்ற இரண்டு வாலிபர்களை ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள லட்சுமி நகர் பகுதியில் காவல் ஆய்வாளர் ரமேஷ் கண்ணன், உதவி காவல் ஆய்வாளர் ஆரோக்கியதாஸ் ஆகியோர் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அதிகாலை 4 மணியளவில் இரண்டு வாலிபர்கள் சந்தேகிக்கும் வகையில் அங்குமிங்கும் சுற்றி திரிந்தனர். பின் அவர்களை பிடித்து சோதனையிட்டபோது அவர்களிடம் கஞ்சா இருப்பது […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

குடி போதையில்….. அதிவேகம்…… பெண் மீது மோதி தப்பி ஓட முயன்ற காவலர்….. திருப்பூரில் பரபரப்பு…!!

திருப்பூரில் குடி போதையில் இருசக்கர வாகனம் ஓட்டி சென்ற காவல் அதிகாரியே பெண்ணின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் அவிநாசி எல்லைக்கு உட்பட்ட பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் காவல்துறை அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் மயில்சாமி. இவர் நேற்று மாலை நேரத்தில் தனது இருசக்கர வாகனத்தில் அவிநாசி அருகே சென்று கொண்டிருந்த பொழுது, சாலையின் ஓரமாக  நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணின் மீது மோதிவிட்டு வாகனத்தை நிற்த்தாமல் சென்றுள்ளார். இதையடுத்து […]

Categories
ஈரோடு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பவானிசாகர் அணையில்…. கரைபுரண்டு ஓடும் வெள்ளம்… 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு எச்சரிக்கை..!!

பவானிசாகர் அணையில் 12,750 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது. இதனையடுத்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 102 அடியை எட்டியது. 105 அடி உயரமுள்ள அணையில் 102 அடிக்கு மேல் நீர் தேக்கி வைக்கமுடியாத நிலையில் உள்ளது. எனவே, பாதுகாப்பு கருதி அணைக்கு வந்த 7,000 கனஅடி உபரி நீர் இன்று அதிகாலை வெளியேற்றப்பட்டது. அணை நீர் திறப்பு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

3 நாட்கள் விடுமுறை …… ”வங்கியை பதம் பார்த்த கொள்ளையர்கள்” போலீஸ் விசாரணை …!!

வங்கிக்குள் கொள்ளையர்கள் நுழைந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் ஜன்னல் கம்பியை அறுத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர். திருப்பூர் மாவட்டம்  பல்லடம் அருகே செயல்படும் வங்கியில் கடந்த சனிக்கிழமை பணி நேரம் முடிந்ததும் வங்கி ஊழியர்கள் பூட்டி விட்டு சென்றுள்ளனர். அதன்பின் மூன்று நாள் தொடர் விடுமுறை முடிந்து இன்று அலுவலர்கள் பணிக்குத் திரும்பிய […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

என்ன இடிச்சிட்டு போய்ட்டான்… டிராபிக் ராமசாமி திடீர் சாலை மறியல்…. திருப்பூரில் பரபரப்பு…!!

திருப்பூரில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் பல்லடம் ரோட்டில் சந்தைப்பேட்டை அருகில் உள்ள பஸ் நிலையப் பகுதியில் இன்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு தலைக்கவசம் இல்லாமல் வந்தவர்களையும், வாகன ஆவணங்கள் இல்லாமல் வந்தவர்களையும் பிடித்து ஓரமாக நிறுத்தியதாக கூறப்படுகிறது. அப்போது வாகன ஓட்டி ஒருவர் ராமசாமி மீது இடிக்க வந்ததாகவும், அதை காவல்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்றும் கூறிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஸ்டாலின் காலம் முழுவதும் பொறுத்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான்” கடம்பூர் ராஜு கிண்டல்..!!

ஸ்டாலின் காலம் முழுவதும் பொறுத்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான் என்று கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.   திருப்பூரில் முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதனின் மகன்  திருமண விழா இன்று நடைபெற்றது. இதில் திமுக தலைவர் முக ஸ்டாலின், பாஜகவின் சி.பி.ராதாகிருஷ்ணன் உட்பட அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவின் போது பேசிய  முக ஸ்டாலின்,பொறுத்தார் பூமி ஆள்வார், ஆகவே நாங்கள் பொறுத்துக்கொண்டு இருக்கிறோம். பாஜகவை திமுக வீழ்த்தவில்லை. மக்கள் தான் வீழ்த்தியிருக்கிறார்கள் என்றார். மேலும் பேசிய ஸ்டாலின்,  முதல்வர் பழனி சாமி […]

Categories
மாநில செய்திகள்

சொன்னபடி செய்தால்…. “முதல்வருக்கு பாராட்டு விழா நடத்த தயார்” ஸ்டாலின் அசத்தல் பேச்சு.!!

மொத்த முதலீட்டையும் தமிழகத்திற்கு கொண்டு வந்தால் முதல்வர் பழனி சாமிக்கு பாராட்டு விழா நடத்த தயார் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  திருப்பூரில் முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் மகன்  திருமண விழாவில் திமுக தலைவர் முக ஸ்டாலின், பாஜகவின் சி.பி.ராதாகிருஷ்ணன் உட்பட அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவின் போது பேசிய  முக ஸ்டாலின், பொறுத்தார் பூமி ஆள்வார், நாங்கள் பொறுத்துக்கொண்டு இருக்கிறோம். பாஜகவை திமுக வீழ்த்தவில்லை. மக்கள் தான் வீழ்த்தியிருக்கிறார்கள் என்றார். மேலும் முதல்வர் பழனி […]

Categories

Tech |