Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சிறுமியை திருமணம் செய்து கொண்டு…. கத்தியால் குத்திய நபர்…. போலீஸ் விசாரணை…!!!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை பகுதியில் பெயிண்டரான மணிகண்டன்(27) என்பவர் வசித்து வருகிறார். இவரும் பொள்ளாச்சியை சேர்ந்த 15 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் மணிகண்டன் சிறுமியை திருமணம் செய்து கொண்டு உடுமலையில் இருக்கும் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் சிறுமி தனது தாய் வீட்டிற்கு வந்துவிட்டார். நேற்று முன்தினம் மணிகண்டன் சிறுமியின் வீட்டிற்கு சென்று தன்னுடன் வாழ வருமாறு அழைத்துள்ளார். அதற்கு சிறுமி மறுப்பு தெரிவித்ததால் கோபமடைந்த மணிகண்டன் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

உடலில் சூடு வைத்து சிறுமி கொலை…. கல்நெஞ்சம் படைத்த தம்பதி கைது…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் திருவள்ளுவர் நகரில் சுமை தூக்கும் தொழிலாளியான பிரகாஷ்(26) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌரி(24) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 4 வயதுடைய ஷிவானி என்ற மகள் இருந்துள்ளார். இவர்கள் அதே பகுதியில் வசிக்கும் மல்லிகா என்பவரது வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்தனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மல்லிகாவின் உறவினரான ராஜேஷ் குமார்(31)-கீர்த்திகா(24) தம்பதியினர் அடிக்கடி மல்லிகாவின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளனர். இந்த தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை. இதனால் ஷிவானியுடன் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மகனுடன் தீக்குளிக்க முயன்ற தம்பதி….. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு….!!!

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தம்பதி தனது 4 வயது மகனுடன் மனு அளிப்பதற்காக சென்றுள்ளனர். அவர்கள் திடீரென உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் காவுத்தம்பாளையம் பகுதியில் வசிக்கும் சம்பத், அவரது மனைவி உமாமகேஸ்வரி, மகன் என்பது தெரியவந்தது. இதுகுறித்து சம்பத் கூறியதாவது, எனக்கு பாத்தியப்பட்ட ஆறு ஏக்கர் விவசாய நிலத்தில் வாழை, மசால் புல் நடவு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சுக்குநூறாக நொறுங்கிய கார்…. கோர விபத்தில் தந்தை-மகன் பலி…. பரபரப்பு சம்பவம்…!!!

கார் மீது வேன் மோதிய விபத்தில் தந்தை, மகன் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சின்னியகவுண்டம் பாளையம் பகுதியில் பனியன் நிறுவன தொழிலாளியான பண்ணாரி(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கோபால்(28) என்ற மகன் இருந்துள்ளார். இவரது கால்களில் நீர் கட்டி இருந்துள்ளது.அதற்கு மந்திரித்து கயிறு கட்டுவதற்காக பண்ணாரி தனது மகனுடன் நேற்று காலை ஆமந்தகடவு பகுதிக்கு காரில் சென்றுள்ளார். இந்நிலையில் சின்னபுத்தூர் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வேகமாக […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தனியார் பேருந்து-ஸ்கூட்டர் மோதல்…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. கோர விபத்து…!!

தனியார் பேருந்தும் ஸ்கூட்டரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் இருந்து தனியார் பேருந்து ஒன்று பயணிகளுடன் ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் விளாங்காட்டுவலசு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக வந்த ஸ்கூட்டர் தனியார் பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் ஸ்கூட்டரில் வந்த பி.சந்தோஷ்(24), ஆர். சந்தோஷ்(24) ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அதிகாரி போல நடித்த நபர்…. பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகார்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

அதிகாரிகள் போல நடித்து நகை மற்றும் பணத்தை பறித்து சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளகோவில் பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினரை பார்ப்பதற்காக ஈரோடு மாவட்டத்திலுள்ள கொல்லம்பாளையத்திற்கு சென்றுள்ளார். அதன்பிறகு மோட்டார் சைக்கிளில் சுப்பிரமணி மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் சுப்ரமணியின் மோட்டார் சைக்கிளை நிறுத்திய மர்மநபர் ஒருவர் தன்னை வரித்துறை அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டார். அதன் பிறகு சுப்பிரமணியை மிரட்டி அந்த நபர் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற மாணவி…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஸ்கூட்டர் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள கணபதிபாளையம் பகுதியில் கருணாநிதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரூப சத்யா தேவி என்ற மகள் இருந்துள்ளார். இவர் 12-ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு திருச்சியில் இருக்கும் ஒரு கல்லூரியில் சேருவதற்காக விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் சத்யா தேவி விநாயகர் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக தனது ஸ்கூட்டரில் சென்றுள்ளார். இவர் சென்னிமலைபாளையம் நடுதோட்டம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது பின்னால் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கடனை வசூலிக்க சென்ற நபர்…. கத்தியால் குத்திய தோழியின் கணவர்…. போலீஸ் நடவடிக்கை…!!

கடன் வசூலிக்க வந்த நபரை வாலிபர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை பகுதியில் எலக்ட்ரீசியனான முருகானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் சிவா என்பவருக்கு ஐந்தாயிரம் ரூபாய் கடனாக கொடுத்துள்ளார். இந்நிலையில் கடன் தொகையை வசூலிப்பதற்காக சிவாவின் வீட்டிற்கு முருகானந்தம் சென்றுள்ளார். அங்கு அவர் இல்லாததால் முருகானந்தம் சிவா மனைவியின் தோழி ஒருவரது வீட்டிற்கு சென்று விசாரித்துள்ளார். இது பற்றி எனக்கு தெரியாது என்று அந்த பெண் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“என்னதான் கிண்டல் பண்றாங்க” வாலிபரின் வெறிச்செயல்…. போலீஸ் நடவடிக்கை….!!

பனியன் நிறுவன ஊழியரை வாலிபர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் பகுதியில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வேல்முருகன் தனது நண்பர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் ராஜ்குமார் என்பவர் சாலையை கடந்து சென்றுள்ளார். அந்த சமயம் வேல்முருகன் தனது நண்பருடன் சத்தமாக சிரித்துப் பேசிக் கொண்டிருந்ததால் தன்னை கிண்டல் செய்கிறார்கள் என நினைத்து ராஜ்குமார் அவர்களிடம் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நெருக்கமாக இருக்கும் புகைப்படம்…. மனைவியை மிரட்டிய கணவர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக கூறி மனைவியை மிரட்டிய குற்றத்திற்காக கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கணியூர் பகுதியை சேர்ந்த 32 வயதுடைய வாலிபருக்கும், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த இளம்பெண் பழனி அனைத்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தங்கையை கவனித்து வந்த அண்ணன்…. வீட்டில் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கணவர் இறந்த துக்கத்தில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் பெரியார் நகரில் சிவகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கீதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு குழந்தை இல்லை. கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கீதா அதற்கான சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட சிவகுமார் திடீரென உயிரிழந்துவிட்டார். இதனால் கீதாவை அவரது அண்ணன் குணசீலன் என்பவர் திருச்சியில் இருக்கும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எங்க கொடுக்குறாங்க….? அதிகரித்த பிளாஸ்டிக் பயன்பாடு…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…!!

பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை குறைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தூய்மையான தமிழகத்தை உருவாக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது குறித்து மடத்துக்குளம் பகுதி சமூக ஆர்வலர்கள் கூறும்போது, தமிழக அரசு ஒரு முறை மட்டும் பயன்படுத்த கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. ஆனால் மடத்துக்குளம், கணியூர், கொழுமம், […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அருவியில் குளிப்பதற்கு தடை…. ஏமாற்றத்தில் சுற்றுலா பயணிகள்….!!

பஞ்சலிங்க அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமூர்த்தி மலையில் பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது. சுற்றியுள்ள வனப் பகுதியிலிருந்து பல்வேறு வழிகளில் ஓடிவரும் தண்ணீர் இந்த பஞ்சலிங்க அருவியில் ஒன்றுசேர்ந்து விழுகிறது. இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்திமலைக்கு வந்துள்ளனர். ஆனால் திடீரென அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு கோவில் நிர்வாகத்தினர் தடை விதித்துள்ளனர். மதியம் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கணவருடன் ஏற்பட்ட பழக்கம்…. பெண்ணின் விபரீத செயல்…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண் தனது 2 குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயபாரதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக ஜெயபாரதி தனது குழந்தைகளுடன் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். தற்போது சரவணனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சிறப்பாக நடைபெறும் ஆயுத பூஜை…. சாலையோரத்தில் கிடக்கும் பூக்கள்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வந்த பூக்கள் மீதம் இருந்ததை வியாபாரிகள் சாலையில் கொட்டி சென்றுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் ஆயுத பூஜையை முன்னிட்டு பனியன் நிறுவனங்கள் மற்றும் வீடுகள் உள்பட பல பகுதிகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றுள்ளது. இதில் பூஜைகளுக்கு பூக்கள் உள்பட பல பொருட்களை பயன்படுத்தி உள்ளனர். இந்நிலையில் ஆயுதபூஜைக்கு பனியன் நிறுவனங்களில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றது. அதன்பின் வீடுகளிலும் தூய்மை பணிகள் தீவிரமாக நடைபெற்று இருக்கிறது. பின்னர் இங்கிருந்து அகற்றப்படும் கழிவுப் பொருட்கள் பல […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பள்ளியில் நடைபெற்ற முகாம்…. தலைமை தாங்கிய முதன்மை மாவட்ட நீதிபதி…. கலந்து கொண்ட பொதுமக்கள்…!!

சொக்கனூரில் மாவட்ட கண் பரிசோதனை மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள சொக்கனூரில் மாவட்ட கண் பரிசோதனை முகாம் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் அங்குள்ள பள்ளியில் வைத்து நடைபெற்றுள்ளது. இந்த முகாமில் முதன்மை மாவட்ட நீதிபதியான சுவர்ணம் நடராஜன் தலைமை தாங்கியுள்ளார்.மேலும் இதில் இலவச சட்ட உதவி மைய வக்கீல் மற்றும் நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பேட்டியளித்துள்ளனர். இதனையடுத்து 100-க்கும் மேற்பட்ட மக்களுக்கு கண் பரிசோதனை நடைபெற்றுள்ளது.

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அங்கீகரிக்கபடாத மனை…. ஊராட்சி தலைவர் மீது வழக்கு…. போலீஸ் விசாரணை…!!

சட்ட விதிமுறைகளை மீறி தடையின்மை சான்று வழங்கியதற்காக ஊராட்சி தலைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள கொண்டரசம்பாளையத்தில் உதயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை தாராபுரம் தாலுகா, கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில் தலைவராக இருந்துள்ளார். இந்நிலையில் 26 இடங்களில் வீட்டு மனையை அமைத்து விற்பதற்காக அங்கீகரிக்கப்படாத மனை இடங்களுக்கு சட்ட விதிமுறைகளை மீறி தடையின்மை சான்று வழங்கியதாக உதயகுமார் மீது புகார் எழுந்துள்ளது. இதனால் 3,28,71,535 […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

உதவி செய்வது போல் பாவனை…. முதியவர்கள் மற்றும் கிராம மக்களிடம் பணம் மோசடி…. போலீஸ் நடவடிக்கை…!!

உதவி செய்வது போல் முதியவர்களையும், கிராம மக்களையும் ஏமாற்றிய குற்றத்திற்காக பீகார் மாநிலத்தை சேர்ந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரத்தில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மூலனூர் மற்றும் அலங்கியம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்கச் செல்லும் கிராம மக்கள் மற்றும் முதியவர்களை கண்காணித்து வந்த சிலர் அவர்களுக்கு பணம் எடுத்துக் கொடுப்பது போல் ஏமாற்றியும், ஏ.டி.எம்., கார்டை மாற்றியும், பணத்தை திருடிச் செல்லும் சம்பவம் அடிக்கடி நடந்து வந்துள்ளது. […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சுத்தம் செய்ய சென்ற பெண்…. கோவிலில் நடந்த சம்பவம்…. போலீஸ் நடவடிக்கை…!!

கோவில் நகைகளை திருடிய குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள அமராவதிபாளையத்தில் மாகாளியம்மன் என்ற கோவிலில் மணிராஜ் என்பவர் 8 வருடமாக பூசாரியாக இருந்து வருகிறார். இந்நிலையில் அந்த கோவிலுக்கு சுத்தம் செய்ய அப்பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் சென்றுள்ளார். அப்போது கோவிலின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கோவில் பூசாரிக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு வந்த பூசாரி கோவிலுக்கு உள்ளே சென்று பார்க்கும் போது கருவறையில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மத்திய அரசுக்கு கண்டனம்…. விவசாயிகள் சங்கத்தினரின் போராட்டம்…. திருப்பூரில் பரபரப்பு…!!

தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம் அண்ணாசிலை அருகில் தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் தலைவர் காளிமுத்து என்பவர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதில் செயலாளர் சுப்பிரமணியம், மாவட்டத் தலைவர் கதிர்வேல் உட்பட 200-க்கும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“நிழற்குடை அமைக்க வேண்டும்” சிரமப்படும் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

நிழற்குடை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள தேவன் புதூர் பகுதியின் வழியாக பொள்ளாச்சி, ஆனைமலை போன்ற கிராமங்களுக்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேவன் புதூர் சந்திப்பிற்கு வந்து பொதுமக்கள் பழனி, உடுமலை, பொள்ளாச்சி போன்ற பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். தற்போது இந்த இடத்தில் பயணிகள் நிழற்குடை இல்லாததால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, நிழற்குடை இல்லாததால் நீண்ட நேரமாக நிற்கும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மதுவுக்கு அருகில் இருந்த பாட்டில்…. விவசாயிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தவறுதலாக பூச்சிக்கொல்லி மருந்து குடித்து விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஆனந்தபுரம் சூளைமேடு பகுதியில் விவசாயியான குப்புசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மது வாங்கி வந்து வீட்டில் வைத்து குடிப்பது வழக்கம். இந்நிலையில் குப்புசாமி தான் வாங்கி வந்த மதுவை குளியலறையில் வைத்துள்ளார். அதன் அருகிலேயே செடிகளுக்கு பயன்படுத்தும் பூச்சிக் கொல்லி மருந்தும் இருந்துள்ளது. இந்நிலையில் குப்பசாமி தவறுதலாக மதுபாட்டிலுக்கு பதிலாக பூச்சி மருந்தை எடுத்து குடித்து விட்டார். இதனால் மயங்கி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பீடா கடையில் இருந்த பொருள்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக போதை சாக்லேட் விற்பனை செய்த 2 வடமாநில வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பெருமாநல்லூர் பகுதியில் சட்டவிரோதமாக போதை சாக்லேட் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஒரு பீடா கடையில் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது 20 முதல் 500 ரூபாய் வரை போதை சாக்லேட் விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து பீடா கடையை நடத்தி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு ஓய்வூதியம் கொடுங்க….. சிரமப்படும் இசைக்கலைஞர்கள்…. ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு…!!

நாதஸ்வரம் மற்றும் தவில் இசைக்கலைஞர்கள் நலச்சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஏராளமான பொதுமக்கள் மனு அளிப்பதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில் நாதஸ்வரம் மற்றும் தவில் இசைக்கலைஞர்கள் நலச்சங்கத்தினர் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கடந்த 1 1/2 வருடமாக கோவில் திருவிழா, திருமணம் போன்ற அனைத்து விசேஷங்களும் கொரோனா தொற்று பாதிப்பினால் தடைபட்டுள்ளது. இதனால் தங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே கலைஞர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள போயம்பாளையம் பகுதியில் கூலி தொழிலாளியான பொன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் அவ்வழியாக வேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் பொன்ராஜின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது. இதனால் படுகாயமடைந்த பொன்ராஜை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

காளையின் உருவம்…. பல வருடங்களாக கிடக்கும் கல்…. தொல்லியல் துறையினருக்கு கோரிக்கை…!!

காளையின் உருவம் செதுக்கப்பட்டு கிடக்கும் கல்லை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என புராதன ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எரகாம்பட்டியிலிருந்து சந்திராபுரம் செல்லும் சாலையோரத்தில் ஒரு வேப்பமரம் உள்ளது. இந்த மரத்தடியில் 10 அடி நீளமும், 2 அடி அகலமும் உடைய நடுக்கல் பல ஆண்டுகளாக கிடைக்கிறது. இந்நிலையில் காளையின் உருவம் செதுக்கப்பட்டுள்ள அந்த கல்லில் செவ்வக வடிவத்தில் கோடுகளும், எழுத்துக்களும் உள்ளன. இதுகுறித்து சந்திராபுரம் பகுதியில் வசிக்கும் புராதன ஆர்வலர் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட தீ விபத்து….. எரிந்து நாசமான பொருட்கள்…. பல மணி நேர போராட்டம்…!!

ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகி விட்டது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ளமுத்துக்காளிவலசு பகுதியில் சபரி என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக தேங்காய் எண்ணெய் ஆலை நடத்தி வருகின்றார். இந்த ஆலையில் பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயத்தில் தேங்காய் பருப்பு சூடுபடுத்தும் கலனில் இருந்து புகை வந்துள்ளது. அதன் பிறகு திடீரென கலன் முழுவதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தடை செய்யப்பட்ட விதைகள்…. பரிசோதனை அவசியம்…. விதை ஆய்வு துறையின் எச்சரிக்கை….!!

 முளைப்பு சக்தி குன்றிய விதைகளை விற்பனை செய்யக்கூடாது என விதை ஆய்வு துறை அதிகாரி எச்சரித்துள்ளார்.  திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விதை ஆய்வு துறை முளைக்கும் சக்தி குறைவாக இருக்கும் விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்யத் தடை விதித்துள்ளது. இதுகுறித்து விதை ஆய்வு துறை அதிகாரி வெங்கடாசலம் கூறும்போது வியாபாரிகள் விதைகளை உரிய இடத்தில் கொடுத்து ஆய்வு செய்து முடிவுகளைப் பெற்றுக்கொண்டு அதன் நகலை விற்பவரிடத்தில் கொடுக்குமாறு தெரிவித்துள்ளார். அதோடு ஆய்வு முடிவுகள் பெறப்படவில்லை எனில் விற்பனையாளர்கள் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சேவலை வைத்து சூதாட்டம்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கட்டபொம்மன் நகர் பகுதியில் சேவல் சூதாட்டம் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சில பேர் சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்டதை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனையடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக அதே பகுதியில் வசிக்கும் சங்கர், நடராஜன், கல்கி, ராமமூர்த்தி, செந்தில்குமார் ஆகிய […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? லட்சக்கணக்கில் ஏற்பட்ட சேதம்…. திருப்பூரில் பரபரப்பு….!!

நூற்பாலை குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகி விட்டது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கள்ளகிணறு கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான நூற்பாலை ஒன்று செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நூற்பாலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்குள்ள குடோனில் விற்பனைக்காக கழிவுப் பஞ்சு மூட்டைகள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திடீரென குடோனில் இருந்து கரும்புகை வந்துள்ளது. அதன்பின் சற்று நேரத்திலேயே கழிவுப் பஞ்சு மூட்டைகளில் தீ மளமளவென […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எந்த தடுப்புகளும் இல்லை….. சிரமப்படும் வாகன ஓட்டிகள்…. சமூக ஆர்வர்களின் கோரிக்கை….!!

பாலத்திற்கு பக்கவாட்டு சுவர் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம், கணியூர், மடத்துக்குளம் போன்ற பகுதிகளுக்கு கோவை- திண்டுக்கல் சாலையில் இருந்து மைவாடி சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும். இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கிறது. இந்நிலையில் அங்கு செல்லும் ஓடைக்கு மேல் கட்டப்பட்டுள்ள பாலத்தில் தடுப்புகளோ, பக்கவாட்டு சுவரோ எதுவுமில்லை. மேலும் பாலத்தின் ஓரத்தில் உள்ள சாலைப்பகுதி மிகவும் சேதமடைந்துள்ளது. இதனால் அவ்வழியாக […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வீட்டின் மேற்கூரையை பிரித்து…. அத்துமீறி நுழைந்த மர்ம நபர்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

வீட்டின் மேற்கூரையை பிரித்து மர்ம நபர் பணம் மற்றும் செல்போனை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம் பகுதியில் லாரி டிரைவரான லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் யாரும் இல்லாத நேரத்தில் லட்சுமணனின் வீட்டு மேற்கூரையை பிரித்து மர்மநபர் ஒருவர் உள்ளே புகுந்துள்ளார். அதன் பிறகு வீட்டில் இருந்த ஐந்தாயிரம் ரூபாய் பணம் மற்றும் செல்போன் போன்றவை திருடிவிட்டு அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த போது…. அத்துமீறி நுழைந்த மர்ம நபர்…. வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

மர்ம நபர் வீட்டிற்குள் நுழைந்து செல்போன் மற்றும் பணத்தை திருடிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம் பகுதியில் உலகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவரது அண்ணன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்திருந்த உறவினர்கள் உலகநாதனின் வீட்டு மேல் மற்றும் தரை தளத்திலும் தங்கியிருந்தனர்.இதனையடுத்து மாடியின் வழியாக மர்ம நபர் ஒருவர் வீட்டுக்குள் நுழைந்து உறவினர்களின் செல்போன் மற்றும் 3 ஆயிரம் ரூபாய் பணம் போன்றவற்றை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இது எப்படி நடந்திருக்கும்….? மளமளவென பற்றி எரிந்த தீ…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் பகுதியில் ரஷீத் அலி என்பவர் வசித்து வருகிறார். இவர் கழிவு பஞ்சிலிருந்து நூல் தயாரிக்கும் மில் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அதிகாலை 4 மணி அளவில் இந்த மில்லில் இருக்கும் பஞ்சு அரைக்கும் பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“இவ்ளோ நாள் ஆகியும் தரல” ஒப்பந்த அடிப்படையில் இயங்கிய வாகனங்கள்…. கலெக்டரிடம் அளிக்கப்பட்ட மனு…!!

வாடகை தொகையை வழங்க வேண்டி சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத்திடம் தென்னிந்திய சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் நல சங்கத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் கடந்த சட்டமன்ற தேர்தல் பணிக்காக 350-க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டுள்ளது. ஆனால் தேர்தல் முடிந்து பல மாதங்கள் ஆன பிறகும் வாகனங்களுக்கு உரிய வாடகை தொகை வழங்கப்படாமல் உள்ளது. […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அதுக்குன்னு இப்படியா பண்ணனும்…. நண்பர்களின் கொடூர செயல்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

வியாபாரியை சுத்தியலால் அடித்துக் கொலை செய்த நண்பர்களுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கே.வி.ஆர் நகரில் பாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வியாபாரியான ஜார்ஜ் என்பவர் 1500 ரூபாய் பணம் கொடுக்க வேண்டும். இதுகுறித்து பாண்டியன் தனது நண்பர்களான மாரிமுத்து மற்றும் மாணிக்கத்திடம் தெரிவித்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு ஒர்க்ஷாப் அருகில் நின்று கொண்டிருந்த ஜார்ஜிடம் பாண்டியனுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை தருமாறு அவரது நண்பர்களான மாரிமுத்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“பழுதாகி பாதியில் நின்ற லிப்ட்” மூளை சிதறி பலியான பெண்…. திருப்பூரில் பரபரப்பு…!!

லிப்ட் பழுதாகி கதவு திறந்ததால் எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்த பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆஷர் மில் லேபர் காலனியில் வாசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமாரி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடுகளில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல வீட்டு வேலைகளை முடித்துவிட்டு குமாரி அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது தளத்தில் இருந்து லிப்ட் மூலம் கீழே […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. மொத்தமாக சிக்கிய 15 டன்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த 15 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகம்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக குடிமைப்பொருள் பறக்கும் படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி பறக்கும் படை அதிகாரிகள் அப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் திடீரென சோதனை செய்துள்ளனர். அப்போது அங்கு மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததை அதிகாரிகள் பார்த்துள்ளனர். இதனையடுத்து அதிகாரிகள் அங்கு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இவங்க பண்ணிருப்பாங்களோ…? வாலிபருக்கு நடந்த கொடூரம்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

வாலிபரை வெட்டிக் கொலை செய்த மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வீராட்சி மங்கலம் பகுதியில் கோபிநாத் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அதிகாலை நேரத்தில் வீட்டிலிருந்து வெளியேறிய இந்த வாலிபரை மர்ம நபர்கள்  கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த தாராபுரம் காவல்துறையினர் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் கடைசியாக கோபிநாத்தின் செல்போனை தொடர்பு கொண்டு பேசிய அந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“வாழை இலையை பயன்படுத்துங்க” அதிகாரிகளின் திடீர் ஆய்வு…. உரிமையாளர்களுக்கு அறிவுரை…!!

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஹோட்டல்களில் திடீரென ஆய்வு மேற்கொண்டுள்ளனர். திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் மாவட்டம் முழுவதும் இருக்கும் ஹோட்டல்களில் சுத்தமான முறையில் உணவு தயாரிக்கப்படுகிறதா என ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் இருக்கும் ஹோட்டல்களில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் சுத்தமில்லாமல் உணவு தயாரித்த 8 ஹோட்டல்களுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். அதன்பிறகு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உபயோகித்த 4 […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

என்ன பண்ணியும் சரியாகல…. பார்த்ததும் அதிர்ச்சியடைந்த கணவர்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் பகுதியில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் சித்ராவின் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் இவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் மன உளைச்சலில் இருந்த சித்ரா தனது வீட்டில் இருந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அதிகாலையில் வந்த அழைப்பு…. சாலையில் சிந்தி கிடக்கும் வாலிபரின் ரத்தம்… திருப்பூரில் பரபரப்பு…!!

வாலிபரை மர்மநபர்கள் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டபோது சடலமாக கிடந்த வாலிபரின் உடலில் அரிவாளால் வெட்டப்பட்ட காயங்கள் இருந்துள்ளது. மேலும் வாலிபர் இறந்து கிடந்த இடத்திலிருந்து சிறிது தூரம் கழித்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் வரை சாலையில் ரத்தம் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கடைக்குள்ள யாரு இருக்கா….? போதையில் தள்ளாடிய படி வந்த நபர்…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

விலை உயர்ந்த மது பானங்களை குடித்து கடையில் திருட முயற்சி செய்த பேக்கரி மாஸ்டரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த கடையில் வேலை பார்க்கும் குமார் என்பவர் பணி முடிந்து கடையை பூட்டி விட்டு சென்றுள்ளார். இதனையடுத்து அதிகாலை 2 மணி அளவில் கடைக்கு வந்த குமார் விளக்கு எரிந்த நிலையில் ஆள் இருக்கும் சத்தம் கேட்பதை கவனித்துள்ளார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த குமார் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அதனால தான் கொன்னுட்டேன்…. பரிசோதனையில் தெரிந்த உண்மை…. திருப்பூரில் பரபரப்பு…!!

விவசாயி மயில்களுக்கு விஷம் வைத்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வலசுபாளையம் கிராமத்தில் விவசாயியான பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் மயில்கள் இறந்து கிடப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறை அதிகாரிகள் உயிரிழந்து கிடந்த 12 பெண் மயில்கள் மற்றும் 7 ஆண் மயில்களை பார்வையிட்டுள்ளனர். அதன் பின் கால்நடை மருத்துவர் இறந்து கிடந்த மயில்களின் உடல்களை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அவள் என்ன விட்டு போயிட்டா…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மனைவி பிரிந்து சென்றதால் கட்டிட தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள வஞ்சிபாளையம் பகுதியில் கட்டிட தொழிலாளியான நாகராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திவ்யா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான நாகராஜ் தினமும் மது அருந்தி விட்டு தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் கோபத்தில் திவ்யா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த நாகராஜ் தனது […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“உன்னையும் அதே மாதிரி செய்வோம்” வெளிவந்த திடுக்கிடும் உண்மை…. திருப்பூரில் பரபரப்பு…!!

கள்ளக்காதல் விவகாரத்தில் தம்பதியினர் இணைந்து வாலிபரை கொலை செய்து புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காதப்புள்ளபட்டி பகுதியில் பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் இருக்கும் குடியிருப்பில் ரமேஷ்-சித்ரா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அங்கு ஆடு மேய்க்கும் வேலையை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சித்ராவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் ரமேஷ் தனது உறவினரான 17 வயது சிறுவன் மற்றும் மணிகண்டன் என்ற வாலிபரை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

என்னது பெட்ரோல் இலவசமா….? வித்தியாசமான விளம்பர பலகை…. நிறுவனத்தினரின் புது ஏற்பாடு….!!

பனியன் நிறுவனத்தில் வித்தியாசமான முறையில் விளம்பரப் பலகை வைத்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள வாவிபாளையம் பகுதியில் பனியன் நிறுவனம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஈஸ்வரன் மற்றும் ஜெயப்பிரகாஷ் ஆகிய இருவரும் இணைந்து வித்தியாசமான விளம்பரப் பலகையை வைத்துள்ளனர். அதாவது அந்த விளம்பர பலகையில் பீஸ்ரேட் அடிப்படையில் ஓவர்லாக் டெய்லர்கள் தங்கள் நிறுவனத்திற்கு தேவை என எழுதியுள்ளனர். மேலும் ஒரு வாரம் முழுவதும் வேலை செய்தால் அவர்களுக்கு இரண்டு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சுடுகாட்டில் கிடந்ததா….? மீட்கப்பட்ட கோவில் கலசங்கள்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

சுடுகாடு அருகே கிடந்த 3 கோவில் கலசங்களை காவல் துறையினர் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எடையபாளையம் சுடுகாடு பக்கத்தில் இருக்கும் ஒரு மரத்தடியில் 3 கோவில் கோபுர கலசங்கள் கிடந்துள்ளது. இதனை பார்த்ததும் பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கே இருந்த 2 கிலோ எடை கொண்ட மூன்று கலசங்களையும் மீட்டு காவல் நிலையத்திற்கு பாதுகாப்பாக எடுத்து சென்றனர். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இங்க இருந்ததை காணும்…. வாலிபர்கள் செய்த செயல்…. மடக்கி பிடித்த காவல்துறையினர்…!!

மோட்டார் சைக்கிளை திருடி சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி பகுதியில் மோட்டார் சைக்கிள் ஷோரூம் அமைந்துள்ளது. இந்நிலையில் வேலை முடிந்ததும் ஊழியர்கள் ஷோரூமை பூட்டி சென்றுள்ளனர். அதன்பிறகு மறுநாள் காலை சென்று பார்த்த போது 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள இரண்டு மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் போன்றவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றதை அறிந்து ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மோட்டார் சைக்கிள்களை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில்…. சிறுவனுக்கு நடந்த விபரீதம்…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

வேன் மோதிய விபத்தில் 5 வயது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் பகுதியில் சந்தானம் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 5 வயதுடைய சரவணன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சரவணன் தனது பாட்டியுடன் கடைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பியுள்ளார். இதனையடுத்து பாட்டி மற்றும் பேரன் ஆகிய இருவரும் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது பனியன் லோடு ஏற்றி வந்த வேன் எதிர்பாராதவிதமாக சிறுவன் […]

Categories

Tech |