Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த குடும்பத்தினர்…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் விசாரணை…!!

வியாபாரியின் வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வள்ளியூரில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டு மளிகை பொருட்களை ஏஜென்சி எடுத்து கடைகளுக்கு விற்பனை செய்து வருகிறார் இந்நிலையில் சுரேஷ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தூங்கிக்கொண்டிருந்த போது மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அதன்பிறகு பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகைகள் மற்றும் 96 […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

10 லட்ச ரூபாய் வரை செலவு…. உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்…. போலீஸ் நடவடிக்கை…!!

தவறான சிகிச்சை அளித்ததாக கூறி வாலிபரின் சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி பகுதியில் மாரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 2-ஆம் தேதி முதல் ஒரு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த சிகிச்சைக்கு பிறகு மாரிக்கு உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வெள்ளத்தில் அடித்து வரப்பட்டதா…? இறந்து கிடந்த சிறுத்தை…. வனத்துறையினரின் தகவல்…!!

வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு இறந்த சிறுத்தையை வனத்துறையினர் பிரேத பரிசோதனை செய்து எரித்துவிட்டனர். திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் அம்பை ஊர்க்காடு தாமிரபரணி ஆற்றங்கரையோரம் இறந்த நிலையில் சிறுத்தை ஒன்று கிடப்பதை பொதுமக்கள் பார்த்துள்ளனர். இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் இறந்து கிடந்த சிறுத்தையை பிரேத பரிசோதனை செய்துள்ளனர். அதன்பிறகு சிங்கம்பட்டி காப்புக்காடு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பேருந்தை பின் தொடர்ந்து சென்ற பெண்…. வசமாக சிக்கிய குற்றவாளிகள்…. போலீஸ் நடவடிக்கை…!!

பேருந்தில் வைத்து தங்க நகையை திருடிய குற்றத்திற்காக  2 பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நெல்லை மாவட்டத்திலுள்ள முத்துவீரப்பபுரத்தில் ஞானசவுந்தரி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக நெல்லையிலிருந்து உடன்குடி செல்லும் பேருந்தில் பயணித்துள்ளார். அப்போது அவரது இருக்கைக்கு அருகில் நின்று கொண்டிருந்த முத்துமாரி மற்றும் மீனாட்சி என்ற பெண்கள் கர்ப்பமாக உள்ளதாக கூறி ஞானசவுந்தரியின் அருகில் அமர்ந்துள்ளனர். இந்நிலையில் ஞானசவுந்தரி ஆட்சி மடத்தில் இறங்கியபின் தனது கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

விடுதலை செய்யுங்க…. பாரதிய ஜனதா கட்சியினரின் போராட்டம்….நெல்லையில் பரபரப்பு…!!

கைது செய்யப்பட்ட முன்னாள் மந்திரியான பொன். ராதாகிருஷ்ணனை விடுதலை செய்ய கோரி பா.ஜனதா தலைவரின் தலைமையில் போராட்டம் நடந்துள்ளது. நெல்லை வட்டத்திலுள்ள வள்ளியூர் வட்டார நிர்வாகியான பாஸ்கர் தாக்கப்பட்டுள்ளார். இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யக் கோரி முன்னாள் மந்திரியான பொன். ராதாகிருஷ்ணன் நெல்லை ஜங்ஷன் பாரதியார் சிலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இதனை கண்டித்து பா. ஜனதா தலைவரின் தலைமையில் கோவில்பட்டி பயணிகள் விடுதி முன்பு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தாங்க முடியாத வலி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வயிற்று வலியால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள  சிறு பாலை என்னும் கிராமத்தில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார்.  இவருக்கு அரவிந்த் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் அரசு கலை கல்லூரியில் பட்டப்படிப்பு பி காம் 2 -ஆம்  ஆண்டு பயின்று வந்துள்ளார்.  இந்நிலையில் வயிற்று வலியின் காரணமாக அரவிந்த்  அவதிப்பட்டு வந்துள்ளார். அதனால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வாழ்கையே வெறுத்து போச்சு…. மூதாட்டி எடுத்த விபரீத முடிவு…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மூலைக்கரைப்பட்டி பகுதியில் முனிசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பூரணம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்தத் தம்பதிகளின் மூன்று மகள்களும் வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் வாழ்க்கையை வெறுத்த பூரணம்மாள் மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி கொண்டு தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். இதனால் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பூரணம்மாள் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆற்றங்கரையில் கிடந்த மூட்டை…. பார்த்ததும் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்… திருநெல்வேலியில் பரபரப்பு…!!

சாக்கு மூட்டையிலிருந்து கொலை செய்யப்பட்ட வாலிபரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கூடங்குளம் அருகே இருக்கும் நம்பியாற்றில் பழைய சாக்கு மூட்டை ஒன்று கிடந்துள்ளது. மேலும் அந்த சாக்கு மூட்டையில் இருந்து ரத்தம் வடிந்துள்ளது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் சாக்கு மூட்டையை திறந்து பார்த்தபோது கழுத்தில் கத்திக்குத்து காயங்களுடன் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் சடலமாக கிடந்ததை பார்த்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குழந்தை பிறந்த அன்றே…. இளம்பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

பிரசவம் முடிந்த சில மணி நேரத்திலேயே இளம்பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பேட்டை பகுதியில் இசக்கி ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மீனா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பிரசவத்திற்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மீனாவிற்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அடுத்து இரவு 8 மணி அளவில் திடீரென மீனா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மீனாவின் கணவர் மற்றும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்ததால்…. டிரைவருக்கு நடந்த விபரீதம்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி பள்ளத்திற்குள் கவிழ்ந்த விபத்தில் டிரைவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பேட்டையில் சரவணன் என்ற டிரைவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சரவணன் தனது நண்பரான ஜாபர் அலி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனையடுத்து நொச்சிக்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ரொம்ப கஷ்டமா இருக்கு…. போலீஸ்காரர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

மன உளைச்சலில் இருந்த போலீஸ்காரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் பகுதியில் குமரேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பாளையங்கோட்டை ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு தங்கபுஷ்பம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் குமரேசனை நெடுஞ்சாலை ரோந்து பிரிவிற்கு இட மாற்றம் செய்துள்ளனர். இதனால் அவர் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து உள்ளார். இந்நிலையில் குமரேசன் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வாழ்கையே வெறுத்து போச்சு…. காவலாளி எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

காவலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பகுதியில் விஸ்வநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த விஸ்வநாதன் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதனை அடுத்து மயங்கிய நிலையில் கிடந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தவறி கீழே விழுந்ததால்…. பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்த பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் மைக்கேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்டோரியா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் விக்டோரியா தனது சகோதரரான மாணிக்கம் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் திருநெல்வேலிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து தருவை-திடியூர் பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்தபோது அங்கிருந்த வேகத்தடையில் மீது மோட்டார் சைக்கிளில் ஏறி இறங்கியுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக விக்டோரியா மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இது எப்படி நடந்திருக்கும்….? மளமளவென பற்றி எரிந்த தீ…. சிரமப்படும் பொதுமக்கள்…!!

குப்பை கிடங்கில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு அணைத்து விட்டனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராமையன்பட்டியில் அமைந்துள்ள மாநகராட்சி குப்பை கிடங்கில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த குப்பை கிடங்கில் திடீரென தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. அதன்பிறகு காற்றின் வேகத்தால் குப்பை கிடங்கில் பற்றிய தீ மளமளவென அனைத்து இடங்களுக்கும் பரவி விட்டது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தோல்வியடைந்த பேச்சுவார்த்தை…. உடலை வாங்க மறுத்த உறவினர்கள்…. திருநெல்வேலியில் பரபரப்பு…!!

கொலை செய்யப்பட்டவரின் சடலத்தை வாங்காமல் உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தாழையூத்து பகுதியில் கட்டிட காண்டிராக்டரான கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரை மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் கடந்த 12-ஆம் தேதி வெட்டி கொலை செய்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று கண்ணனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்கள் சென்ற மோட்டார் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

துரத்தி சென்ற விலங்கு…. கேமராவில் பதிவான காட்சிகள்…. அச்சத்தில் தவிக்கும் பொதுமக்கள்….!!

கரடிகள் ஊருக்குள் நுழைந்து அட்டகாசம் செய்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள விக்கிரமசிங்கபுரம் பகுதிக்குள் அதிகாலை நேரத்தில் 3 கரடிகள் நுழைந்து விட்டது. இந்த மூன்று கரடிகளும் தூய்மை பணியாளர்களை விரட்டியுள்ளது. இதனையடுத்து அந்த 3 கரடிகளும் அங்குள்ள வயல்வெளிக்குள் சென்ற காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது குடியிருப்பு பகுதிக்குள் கரடிகள் அடிக்கடி நுழைந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அதிர்ச்சியடைந்த நண்பர்கள்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

ஆற்றில் குளித்து கொண்டிருக்கும் போது வாலிபர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் பகுதியில் ஜாகிர் உசேன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜாகிர் உசேன் தனது நண்பர்களுடன் இணைந்து சின்ன சங்கரன்கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அதன் பிறகு நண்பர்கள் அங்குள்ள தாமிரபரணி ஆற்றில் குளித்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றதால் ஜாகீர் உசேன் தண்ணீரில் மூழ்கி பலியாகி விட்டார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இப்படியா நடக்கணும்…. சகோதரர்களுக்கு நடந்த விபரீதம்…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

கடலில் மூழ்கி அண்ணன், தம்பி இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வள்ளியூர் பகுதியில் ஜான்சன் அருள் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து கொண்டிருந்தார். இவருக்கு ரெனிஸ் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு அக்னஸ் ராய், பிரவீன் ராய் என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தனது மனைவிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் ஜான்சன் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அதன்பின் கடந்த மாதம் 30-ஆம் தேதி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எனக்கு வாங்கி தரவே இல்ல…. விரக்தியில் மாணவர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

செல்போன் வாங்கி தராததால் கல்லூரி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வீரவநல்லூர் பகுதியில் ஆதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்த வெங்கடேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் தனது பெற்றோரிடம் வெங்கடேஷ் செல்போன் வாங்கித் தருமாறு அடிக்கடி வாக்குவாதம் செய்துள்ளார். ஆனாலும் பெற்றோர் செல்போன் வாங்கித் தராததால் விரக்தியில் இருந்த வெங்கடேஷ் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…? வாலிபர் எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் ஜெயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி வேலை பார்க்கும் பிரபாகர் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பிரபாகர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பிரபாகரின் உடலை கைப்பற்றி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பார்த்ததும் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்… மரத்தில் தொங்கிய சடலம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பணத்தோட்டம் பகுதியில் ஆட்டோ டிரைவரான சத்யராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மதுமிதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சத்யராஜ் தினமும் குடித்து விட்டு தனது மனைவி மற்றும் பெற்றோருடன் தகராறு செய்துள்ளார். இதனை அடுத்து அனைவரும் தூங்க சென்ற பிறகு சத்யராஜ் தனது வீட்டிற்கு பின்புறம் இருக்கும் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இதான் காரணமா இருக்குமோ…? விவசாயிக்கு நேர்ந்த கொடூரம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

மர்ம நபர்கள் விவசாயியை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தாழையூத்து தொகுதியில் பாபு என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பாபு அப்பகுதியில் இருக்கும் சாலையில் நின்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் அங்கு சென்ற மர்ம நபர்கள் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனால் சம்பவ இடத்திலேயே பாபு பரிதாபமாக உயிரிழந்து விட்டார். அதன்பின் அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கல்வெட்டில் இருந்த குறிப்புகள்… பல ஆண்டுகாலம் பழமையானது… கண்டுபிடித்த வல்லுநர்கள்…!!

சேரன்மகாதேவியில் இருக்கும் ராமசாமி கோவிலில் சோழர் காலத்து 1100 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சேரன்மகாதேவியில் இருக்கும் ராமசாமி கோவிலில் பழமையான கல்வெட்டு ஒன்று இருந்துள்ளது. இது குறித்து நெல்லை வரலாற்று பண்பாட்டு மைய நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி கோவிலுக்கு விரைந்து சென்ற இயக்குனர் மாரியப்பன், சேரன்மகாதேவி தமிழ் பேரவை செயலாளர் பாலு மற்றும் நிர்வாகிகள் அங்கு சென்று ஆய்வு செய்துள்ளனர். அதன்பின் மதுரை மாவட்ட முன்னாள் தொல்லியல் அலுவலர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல… அதிர்ச்சியடைந்த நண்பர்கள்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

குளித்து கொண்டிருக்கும் போது தண்ணீரில் மூழ்கி மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரதராஜ் என்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பரத்ராஜ் தனது நண்பர்களுடன் அப்பகுதியில் இருக்கும் குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து குளித்து கொண்டிருக்கும் போது பரத்ராஜ் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி விட்டார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல… தொழிலாளிக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மரத்தில் இருந்து கீழே விழுந்த கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வாசுதேவநல்லூர் பகுதியில் குணசேகரன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குணசேகரன் அப்பகுதியில் இருக்கும் புளிய மரத்தில் புளியம்பழம் பறிப்பதற்காக ஏறியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மரத்தில் இருந்து கீழே விழுந்த குணசேகரனுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தப்புனு தெரிஞ்சா ”அவ்வளவு தான்”… பரபட்சமில்லா நடவடிக்கை – நெல்லை ஆட்சியர் அதிரடி ..!!

நெல்லையில் அரசு மருத்துவ கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆய்வு செய்தார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளதால் மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனைத்தொடர்ந்து திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரியில் வாக்கு எண்ணும் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், காவல் ஆணையர் அன்பு உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வுகளை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

உடனுக்குடன் நடவடிக்கை…. பொருத்தப்பட்ட ஜி.பி.எஸ் கருவி…. சூடு பிடிக்கும் தேர்தல் களம்…!!

தேர்தல் பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு குழுக்களின் வாகனங்களில் ஜி.பி.எஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதன் காரணமாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் பணப் பட்டுவாடாவை தடுக்கும் பொருட்டு நெல்லை மாவட்டத்தில் 15 பறக்கும் படைகளும் மற்றும் 15 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பறக்கும்படையினர், காவல்துறையினர் மற்றும் துணை ராணுவ வீரர்களுடன் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து வீடியோ […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அந்த பெண்ணை காதலிக்க கூடாது…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. கைது செய்த காவல்துறையினர்…!!

காதல் விவகாரத்தை கண்டித்த கூலித் தொழிலாளியை வாலிபர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சமத்துவபுரத்தில் மணிகண்டன் என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் ஒரு வாலிபர் மணிகண்டனின் உறவினர் பெண்ணை காதலித்துள்ளார். இதனை அறிந்த மணிகண்டன் அந்த வாலிபரை பிடித்து எச்சரித்து உள்ளார். இதனால் கோபமடைந்த அந்த வாலிபரின் நண்பரான இசக்கி முத்து என்பவர் மணிகண்டனை கம்பால் தாக்கியுள்ளார். இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் மணிகண்டன் புகார் அளித்தார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அவன் என்ன விட்டு போயிட்டான்…. ஏக்கத்தில் எடுத்த விபரீத முடிவு…. தாய்க்கு நடந்த துயரம்…!!

மகன் இறந்த துக்கத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மூவிருந்தாளி பகுதியில் மகாராஜா பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளின் மகன் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் ஜெயலட்சுமி எப்போதும் சோகமாகவே இருந்துள்ளார். இதனால் அவரது உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டதால் அதற்கான சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் தனது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ரொம்ப நாளா சரியில்லை…. மூதாட்டிக்கு நடந்த துயரம்…. சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்….!!

பூட்டிய வீட்டிற்குள் மூதாட்டி சடலமாக கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்லிடைக் குறிச்சி பகுதியில் மணிமுத்து என்பவரின் மனைவியான சிவனம்மாள் என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மூதாட்டியின் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டு இருந்துள்ளது. இதனால் அந்த மூதாட்டியை அடிக்கடி உறவினர்கள் சென்று பார்த்து வந்துள்ளனர். இதனை அடுத்து சாத்தான்குளம் பகுதியில் வசித்து வரும் அவரது அக்கா மகள் சிவனம்மாளை பார்க்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது சிவனம்மாள் படுக்கையில் உயிரற்று கிடந்ததை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“இதை குடிக்க போறேன்” விளையாட்டு விபரீதமானது… சிறுவனுக்கு நடந்த சோகம்…!!

நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும்போது விளையாட்டாக சிறுவன் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சிவந்திப்பட்டி பகுதியில் முத்தையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 6 ஆம் வகுப்பு படிக்கும் சதீஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சதீஷின் பெற்றோர் வயலுக்கு சென்ற பிறகு அப்பகுதியில் வசிக்கும் சிறுவர்களுடன் சதீஷ் விளையாடி கொண்டிருந்தான். அப்போது வீட்டில் இருந்த களைக்கொல்லி மருந்தை விளையாட்டாக குடிக்க போகிறேன் என்று கூறிய சதீஷ் திடீரென அதனை குடித்துவிட்டான். இதனை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஏற்கனவே 2 மனைவி…. 10 ஆம் வகுப்பு மாணவியை கடத்தியவர்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

ஏற்கனவே 2 பெண்களை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வருபவர் வகுப்பு மாணவியை கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புதூர் கிராமத்தில் ஸ்டீபன் என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவர் தனது இரண்டு மனைவிகளுடன் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் பணகுடி பகுதிக்கு கூலி வேலைக்காக சென்ற ஸ்டீபன் தனக்கு திருமணமானதை மறைத்து அப்பகுதியில் வசிக்கும் பத்தாம் வகுப்பு மாணவியை காதலித்துள்ளார். இதனையடுத்து அந்த மாணவியுடன் கடந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“தேர்தலை புறக்கணிப்போம்” இதை செய்யவே கூடாது…. பொதுமக்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

உயர் மின்னழுத்த பாதை அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நம்பிபத்து கிராமத்தில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான தும்பு ஆலை அமைந்துள்ளது. இந்நிலையில் நம்பிபத்து கிராமம் வழியாக இந்த ஆலைக்கு உயர் மின் அழுத்த மின்சாரம் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஒன்றிணைந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த சமயம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மனைவிக்கு வரதட்சணை கொடுமை…. வேறொரு பெண்ணுடன் குடும்பம்…. போலீசாரின் தீவிர விசாரணை…!!

மனைவியிடம் அதிக வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி, பின் வேறொரு பெண்ணுடன் அவரது கணவர் குடும்பம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புங்கனூர் கிராமத்தில் கிரேனா என்ற பெண் வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த பெண்ணிற்கும் உக்கிரன்கோட்டை பகுதியில் வசித்து வரும் ராஜபாண்டி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கிரேனாவிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு ராஜபாண்டி மற்றும் அவரது பெற்றோர் எட்வர்ட், ரூத் போன்றோர் கொடுமை படுத்தியுள்ளனர். இதனையடுத்து கோபத்தில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பேரனுடன் வெளியே சென்றவர்…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிளில் தனது பேரனுடன் சென்ற முதியவர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அகிலாண்டபுரம் பகுதியில் குழந்தைசாமி என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் தனது பேரன் மகேந்திரன் என்பவருடன் மானுருக்கு சென்று உள்ளார். இந்நிலையில் இவரது மோட்டார் சைக்கிளானது மானூர் பக்கத்தில் சென்று கொண்டிருந்தபோது, குழந்தைசாமி எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி அங்குள்ள சாலையோர பள்ளத்தில் கீழே விழுந்துவிட்டார். இதில் படுகாயமடைந்த குழந்தைசாமியை அருகில் உள்ளவர்கள் மீட்டு நெல்லை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆட்டோவில் இருந்து கீழே விழுந்தவர்…. நடந்த துயர சம்பவம்…. நெல்லையில் சோகம்…!!

ஆட்டோவில் இருந்து தவறி கீழே விழுந்தவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் சண்முகராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சண்முகராஜா ஆட்டோவில் சிவந்திபட்டி சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக ஒரு திருப்பத்தில் திரும்பும்போது சண்முகராஜா நிலைதடுமாறி ஆட்டோவில் இருந்து கீழே விழுந்து விட்டார். இதில் பலத்த காயமடைந்த சண்முகராஜாவை அருகில் உள்ளவர்கள் மீட்டு பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

என்னோட கேம் ஐடியில் விளையாடக்கூடாது… இருவருக்கு கத்திக்குத்து… போலீஸ் வழக்குப்பதிவு…!!

செல்போன் விளையாட்டில் ஐடியை பரிமாறிக் கொண்டதற்காக 2 வாலிபர்களுக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டத்திலுள்ள கூடங்குளம் பகுதியில் வசித்து வருபவர் குருநாதன். இவருடைய மகன் மாற்றுத்திறனாளியான சூர்யா. இவர் தனது செல்போனில் ஒரு கேம்  டவுன்லோட் செய்து விளையாடியுள்ளார். அதற்கான ஐடியை தனது நண்பரான  லிங்கராஜாவிடம் கொடுத்துள்ளார். பின்னர் லிங்கராஜா விளையாடிவிட்டு அதே பகுதியில் வசித்து வரும் நவீன் என்பவரிடம் கொடுத்துள்ளார். இதனை அறிந்த சூர்யா நவீனை அழைத்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வங்கக் கடலில் காற்றழுத்ததாழ்வு நிலை… பரவலாக மழை… பொதுமக்கள் குளிக்க தடை…!!

குற்றாலத்தில் கனமழை பெய்துவருவதால் அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் தென்காசி, நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் நான்குநேரி, களக்காடு, அம்பை போன்ற பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. மேலும் பாபநாசம், சேர்வலாறு அணை பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. மேலும் குற்றாலம் அருவிகளில் நேற்று முன்தினம் இரவிலிருந்து கனமழை பெய்து வருவதால் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தமிழகம் முழுவதும்… அம்மா மினி கிளினிக்… விண்ணப்பித்தவர்களுக்கு நேர்முக தேர்வு…!!

அம்மா மினி கிளினிக்கில் பணியாற்றுவதற்காக நர்சுகள் மற்றும் உதவி நர்சுகள் பணிக்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெற்றுள்ளது. தமிழ்நாடு முழுவதும் அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டுள்ளது. இந்த கிளினிக்கில் பணிபுரிவதற்காக டாக்டர்கள், நர்சுகள் மற்றும் உதவி நர்சுகள் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் அதிக அளவில் வந்துள்ளது. அதற்கான நேர்முகத் தேர்வு நேற்றுமுன்தினம் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் உள்ள கலையரங்கில் வைத்து நடைபெற்றுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக ஆயிரக்கணக்கான நர்சுகள் முகமூடி அணிந்து நேர்முகத்தேர்வில் பங்கேற்க வந்துள்ளனர் அவர்களுக்கு மாவட்ட […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

2 மணிநேரம்… தொடர்ந்து பெய்த மலை… நெல்லையில் குளுமை நிலவியது…!!

நெல்லை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். நெல்லை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 15 நாட்களாக வெயில் வெளுத்து வாங்கிய நிலையில் நேற்று முன்தினம் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் நெல்லை தென்காசி போன்ற மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. சேரன்மகாதேவியில் திடீரென நேற்று காலை கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது. இந்த மழையானது சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் பெய்ததால் சாலையில் நீர் பெருக்கெடுத்து ஓடியுள்ளது. […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பெற்றோரின் அலட்சியம்… தீப்பெட்டியை வைத்து விளையாடிய குழந்தை… தீயில் கருகி மரணம்…!!

தீப்பெட்டி வைத்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தீயில் கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள இளையார் குளம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன்-பால்கனி தம்பதியினர். இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு 3 குழந்தைகள் இருந்தனர். அதில் ஒரு குழந்தையான லக்ஷ்மிக்கு ஐந்து வயது ஆகின்றது. இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று கணவன் மனைவி கூலி வேலைக்கு சென்ற பிறகு பிள்ளைகள் மூவரும் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சிறுமி லட்சுமியின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

என் மனைவிய தப்பா பேசலாமா….? வெட்டிய தலையுடன் காவல் நிலையம் சென்ற சகோதரர்கள்…. நெல்லையில் பரபரப்பு….!!

வாலிபரின் தலையை அறுத்து கொலை செய்துவிட்டு சகோதரர்கள் இருவர் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தாழையூத்து பகுதியிலிருக்கும் புலித்தேவர் நகரைச் சார்ந்தவர் சிதம்பர செல்வம். இவர் கூலி வேலை செய்து வந்தார். சிதம்பர செல்வம் அவரது உறவினரான  பாலாஜி மற்றும் அவரது தம்பி ராமையா அனைவரும் ஒன்றாக மது அருந்துவது உண்டு. அவ்வாறு மது அருந்திக்கொண்டிருக்கும் போது பாலாஜியின் மனைவியை சிதம்பரம் செல்வம் தவறாக பேசியதுதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

புற்றுநோய் மண்டல மையம்… தலைமை தாங்கிய ஆட்சியர்…. காணொலி காட்சி மூலம் திறந்து வைத்த முதல்வர்..!!

புற்றுநோய் மண்டல மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஹைகிரவுண்ட் அரசு ஆஸ்பத்திரியில் ரூபாய் 34 கோடியில் புற்றுநோய் மண்டல மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புற்றுநோய் மண்டல மையத்தை நேற்று முன்தினம் காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்துள்ளார். பின்னர் புற்றுநோய் பாதிப்பில் இருந்த இரண்டு பேர் மீண்டது எப்படி ? என்பது பற்றி விளக்கமாக கூறியுள்ளார். இந்த திறப்பு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

விளையாட்டு வினையானது… ஆத்திரத்தில் செய்த செயல்… முதியவருக்கு நேர்ந்த முடிவு…!!

விளையாட்டில் ஏற்பட்ட  தகராறில் முதியவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியை சார்ந்தவர் அபூபக்கர் சித்திக். இவருடைய மகன் இர்பான் என்பவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் அப்பகுதியில் உள்ள மாணவர்களுடன் சேர்ந்து இர்பான் விளையாட சென்றுள்ளனர். அந்த சமயத்தில் அவர்களுக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இர்பான் தனது வீட்டிற்கு வந்து விட்டதால் அந்த 5 […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மனைவியுடன் தகராறு…. கோபத்துடன் கிளம்பிய கணவர்…. “நான் வீட்ல தான் இருக்கேன்” ஜவுளி வியாபாரி எடுத்த முடிவு….!!

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் ஜவுளி கடை உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் பகுதியைச் சார்ந்தவர் சுப்பிரமணியன்-வனிதா தம்பதியினர். சுப்பிரமணியன் அதே பகுதியில் ஒரு ஜவுளி கடை வைத்து நடத்தி வந்தார். நேற்று ஜவுளி கடையில் வைத்து கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சுப்பிரமணியன் இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வெளியே சென்றுள்ளார். வெகு நேரமாகியும் கணவன் திரும்பி வராததால் வனிதா தொலைபேசியில் அழைத்த போது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

விசிட் அடிக்கும் பறவைகள்…. பயிற்சி கொடுத்து… கணக்கெடுக்கும் பணி தொடக்கம்…!!

பறவைகள் கணக்கெடுப்பு பணி நேற்று முதல் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் தொடங்கியுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு குளங்கள் இருக்கின்றன. இந்த குளங்களுக்கு வெளிநாட்டு பறவைகள் சீசன் காலங்களில் அதிக அளவில் வரும். இதனால் பறவைகள் கணக்கெடுக்கும் பணி கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு தாமிரபரணி நீர்வாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கியுள்ளது. இந்த பணி இன்றுடன் முடிவடைகிறது. நெல்லை மாவட்டத்தில் முன்னீர் பள்ளத்தில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சாமி கும்பிட வந்த இடத்துல இப்படி நடந்துருச்சே… கதறும் ரன்சிதகனி… மர்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு…!!

கோவிலில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்ணிடம் 6 பவுன் சங்கிலி பறித்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டத்திலுள்ள சேரன்மகாதேவி பகுதியில் இருக்கும் பெரியார் குலத்தைச் சார்ந்தவர் கந்தன்-ரஞ்சிதகனி தம்பதியினர். ரஞ்சிதகனி தனது மகனான பிரபுவுடன் சாமிதோப்பில் உள்ள அய்யா வைகுண்டசாமி கோவிலுக்கு தைத் திருவிழா தேரோட்டத்தில் கலந்து கொள்ள வந்துள்ளார். சாமியைக் கும்பிட்டு விட்டு கோவிலுக்கு வெளியே வந்ததும் ரஞ்சிதகனி கழுத்தில் இருந்த 61/2பவுன் தங்கச் சங்கிலி காணாமல் போனதை கண்டு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மனைவி செய்த செயல்…. போலீஸ் விசாரிப்பாங்க…. பயத்தில் கணவன் எடுத்த முடிவு….!!

மனைவி விஷம் குடித்ததால் கணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முக்கூடலில் பாப்பாகுடியை சார்ந்தவர் நாகராஜ். அவருடைய மகன் ரமேஷ்க்கு அதே பகுதியைச் சேர்ந்த வேணியுடன் திருமணமாகி ஆறு மாதங்கள் ஆகின்றன. ரமேஷிற்கு குடிப்பழக்கம் இருந்ததால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் இரவு இவர்களுக்கு இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டதால் வேணி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனே அக்கம்பக்கத்தினர் வேணியை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

8 பேர் மீது குண்டர் சட்டம்… தலைமறைவான முக்கிய குற்றவாளி… ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்…!!

மணல் கடத்தல் விவகாரத்தில் தலைமறைவாக இருந்த குற்றவாளி காவல் துறையினரால்  கைது செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்லிடைக்குறிச்சியில் இருக்கும் பொட்டல் கிராமத்தில் உள்ள விதிகளை மீறி மணல் குவாரியில்  மணல் அள்ளப்படுவதாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப் பட்டதை அடுத்து சேரன்மகாதேவி உதவி கலெக்டர் மணல் குவாரியில் திடீரென்று ஆய்வு நடத்தியுள்ளார். இதில் மணல் குவாரியின் உரிமையாளருக்கு ஒன்பதரை கோடி அபராதம் விதித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக கல்லிடைகுறிச்சி போலீசார்  வழக்கு பதிவு செய்து ஒன்பது பேரை கைது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குளத்துல என்ன மிதக்குது….? விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள்…. நெல்லையில் பரபரப்பு….!!

வாலிபர் குளத்தில் பிணமாக மிதந்து கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் புதிய பஸ் நிலையம் அருகில் இருக்கும்  வேய்ந்தான் குளத்தில் ஒரு ஆண் பிணம் கிடப்பதாக மேலப்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் மேலப்பாளையம் போலீசார் மற்றும் பாளையங்கோட்டை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அழுகிய நிலையில் இருந்த பிணத்தை குளத்துக்குள் இறங்கி மீட்டனர். பின்பு அவரை சோதித்த போது அவருடைய சட்டைப்பையில் ஓட்டுனர் […]

Categories

Tech |