சுவர் இடிந்து விழுந்து மாணவர்கள் பலியான இடத்தை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பொருட்காட்சி திடலில் எதிரில் இருக்கும் சாப்டர் மேல்நிலைப் பள்ளியின் கழிவறை சுவர் இடிந்து விழுந்ததால் விஸ்வரஞ்சன், அன்பழகன், சுதீஷ் ஆகிய 3 மாணவர்கள் பரிதாபமாக இறந்துவிட்டனர். மேலும் படுகாயமடைந்த 4 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மாணவர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாவட்ட முதன்மை […]
