Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

1 1/2 வயதில் மரணம்… குழந்தையை தழுவிக்கொண்ட நீர்… மனதை

திருச்சி மாவட்டம் தென்னுரை சேர்ந்தவர் அப்பாஸ். திருமணம் முடிந்து 15 வருடங்கள் ஆன நிலையில் 15 தினங்களுக்கு முன்பு எட்டாவதாக குழந்தை ஒன்று பிறந்துள்ளது. கணவன் மனைவி இருவரும் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய காரணத்தினால் 6 குழந்தைகளையும் முதல் குழந்தையான 15 வயது சிறுமியின் கட்டுப்பாட்டில் விட்டு சென்றனர். அப்போது 1 1/2 வயதான குழந்தை ஹரி குளியலறையில் விளையாடிக் கொண்டிருக்கையில் தண்ணீர் இருந்த வாலியில் தவறிவிழுந்து இறந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிந்து தில்லைநகர் போலீசார் விசாரணை நடத்தி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஜல்லிக்கட்டு நிறைவு

திருச்சியில் ஜல்லிக்கட்டு நிறைவுபெற்றுள்ளது. கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு ஆங்காங்கே ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவுபெற்றது. கருங்குளத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் 633 காளைகள் 429 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் 22 மாடுபிடி வீரர்கள் காயம் அடைந்தனர். இருந்தும் சிறப்பான முறையில் ஜல்லிக்கட்டினை நடத்தி முடித்துள்ளனர்.

Categories
சென்னை திருச்சி மாவட்ட செய்திகள்

ஐ.டி. கம்பேனியில் வேலைக்குச் சேர்ந்த 2-ஆவது நாளில் இளம்பெண் தற்கொலை..!!

அம்பத்தூரில் ஐ.டி. கம்பேனியில்  வேலைக்குச் சேர்ந்த இளம்பெண், சேர்ந்த 2-வது நாளிலேயே மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். திருச்சியைச் சேர்ந்த  இளம்பெண் தனிதா (வயது  24). இவர் அம்பத்தூரில் இருக்கும் ஐயோபெக்ஸ் டெக்னாலஜி என்ற ஐ.டி. கம்பேனியில்  நேற்று முன்தினம் புதிதாக மென்பொருள் பொறியாளராக பணியில் சேர்ந்துள்ளார். அதன்பின்  நேற்று 2-வது நாளாக  வேலைக்கு  சென்ற தனிதா காலை 10 மணி முதல் மாலை வரை பணிபுரிந்து கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில்  தனிதா திடீரென மாலை 6.45 மணியளவில் அலுவலகம் அமைந்துள்ள கட்டிடத்தின் 8-ஆவது […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“நேர்கொண்ட பார்வை’ டிக்கெட் தகராறு” குடிபோதையில் நண்பனை கொலை செய்த நண்பர்கள்.!!

திருச்சியில் ‘நேர்கொண்ட பார்வை’ டிக்கெட்  தகராரை குடிபோதையில் நண்பர்களுக்குள் பேசும்போது 3 பேர் சேர்ந்து ஒருவரை அடித்து கொன்றனர். திருச்சியை சேர்ந்த தமிழழகன் மற்றும்  “காக்கா” என்று அழைக்கப்படும் கார்த்திக் இருவரும் சேர்ந்து கடந்த  7-ந்தேதி ‘நேர்கொண்டபார்வை’ திரைப்படத்தை பார்க்க தியேட்டர் சென்றுள்ளனர். அங்கே டிக்கெட் வாங்கும் போது இவர்கள் இருவருக்கும் பொன்மலை பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் இருவரும் சேர்ந்து பிரபாகரனை கத்தியால் வெட்டி விட்டு பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். காயமடைந்த […]

Categories

Tech |