அரசு பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 20 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள சிங்கம் பட்டியில் இருந்து மணப்பாறை நோக்கி அரசு டவுன் பேருந்து சென்று உள்ளது. இந்த பேருந்தை கரட்டுப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை டிரைவர் இறக்கிவிட்டு கொண்டிருந்தபோது, திடீரென பின்னால் வந்து கொண்டிருந்த லாரி பேருந்தின் பின் பகுதியில் பலமாக மோதி விட்டது. இதில் பேருந்து பள்ளத்திற்குள் சென்று அங்கிருந்த மின்கம்பத்தில் முட்டி நின்றுவிட்டது. […]
