திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும், முருகனின் பக்தி பாடல்களை பாடியும் பாதயாத்திரையாக வந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் திருச்செந்தூர் கோவிலில் பொங்கல் நாளன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1:3௦ மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடைபெறும். இதனைத்தொடர்ந்து 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், மற்ற கால பூஜைகளும் திருச்செந்தூர் […]
