ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் டிம் பெய்ன், ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸை உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர் என புகழாரம் சூட்டியுள்ளார். ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, மூன்று டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 296 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை மெல்போர்னில் நடைபெறவுள்ளது. ஐசிசி […]
